டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிகள், மால்கள், பொது போக்குவரத்து மே 3-க்கு பிறகும் முடக்கம்?.. ஊரடங்கு நீட்டிப்பா?

Google Oneindia Tamil News

டெல்லி: கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் (மால்கள்), மத வழிப்பாட்டு தலங்கள், பொது போக்குவரத்து ஆகியன மே 3 ஆம் தேதிக்கு பிறகும் மூடியிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Recommended Video

    செப்டம்பரில் கொரோனாவுக்கு தடுப்பூசி... இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

    இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வைரஸின் சமூகப் பரவலை தடுக்க மத்திய - மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை.

    இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட லாக்டவுனானது வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 58 பேர் பலி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 58 பேர் பலி

    முழு நேர சேவை

    முழு நேர சேவை

    சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பச்சை மண்டலங்களில் தனியார் வாகனங்களை கட்டுப்பாடுடன் இயக்க வேண்டும். ஆனால் இந்த பகுதிகளில் விமானம் மற்றும் ரயில்களின் முழு நேர சேவை விரைவில் தொடங்கப்பட வாய்ப்புகள் இல்லை.

    இறுதி

    இறுதி

    மே மாதத்தில் மத்தியில் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் முறைப்படுத்தி தொடங்க வாய்ப்புள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், மத வழிப்பாட்டு தலங்கள், பொது போக்குவரத்து ஆகியவை இயங்காது. அது போல் பொதுமக்கள் கூடுவதற்கும் மே 3 ஆம் தேதிக்கு பிறகும் தடை இருக்கும் என தெரிகிறது. இந்த லாக்டவுனை மீண்டும் நீட்டிப்பதா இல்லை தளர்த்துவதா என்பது குறித்து இந்த வார இறுதியில் முடிவு எடுக்கப்படும்.

    ஆலோசனை

    ஆலோசனை

    நேற்று பிரதமருடனான ஆலோசனையில் பேச அனுமதிக்கப்பட்ட 9 முதல்வர்களில் 5 பேராவது மே 3 க்கு பிறகும் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது போல் கோவிட் 19 பாதிக்காத மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் சில செயல்பாடுகளை தளர்த்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    கொரோனா நோய்

    கொரோனா நோய்

    ஒடிஸா, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் இன்னும் சில வாரங்களுக்கு பொது முடக்கம் தேவை என தெரிவித்துள்ளனர். அது போல் கடந்த 28 நாட்களில் எந்தவித கொரோனா நோயாளியும் இல்லாத பச்சை மண்டலங்களில் தளர்வுகளை கொண்டு வரவும் கூறப்பட்டன. மே 3 ஆம் தேதிக்கு பிறகு என்ன செய்யலாம் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    Education institutions, shopping malls, religious places and public transport are likely to remain shut beyond May 3 when the ongoing lockdown due to coronavirus pandemic is slated to end.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X