டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.. மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதனால் செப்டம்பர் மாதம் திறக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5ஆவது முறையாக லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் பெரும்பாலான இயக்கங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களாக காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல கடந்திருக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி2 மாதங்களாக காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல கடந்திருக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி

கல்லூரிகள்

கல்லூரிகள்

ஒவ்வொரு முறையும் தளர்வுகளை மத்திய அரசு வெளியிடும் போது பள்ளித் திறப்பு எப்போது என்பது குறித்து பெற்றோர், மாணவர்கள் உற்று நோக்கி வந்தனர். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பள்ளி, கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகள்

கல்லூரிகள்

மே மாதம் கிடைத்த தகவலின்படி பள்ளி, கல்லூரிகள் ஜூலை மாதம் 30 சதவீத வருகை பதிவுடன் தொடங்கப்படும். 8-ஆம் வகுப்பு மாணவர்களை வீட்டிலிருக்க அறிவுறுத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் உள்ள பள்ளிக் கல்லூரிகளை திறப்பது என்றும் சமூக பரவலை கடைப்பிடிப்பது, இரு ஷிப்ட்களாக பள்ளியை இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

33 கோடி பேர்

33 கோடி பேர்

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் போக்ரியால் கூறுகையில் பள்ளி, கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்த செய்திக்காக 33 கோடி மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்
    பொதுத் தேர்வு

    பொதுத் தேர்வு

    அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே இதை கூறுகிறேன். ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தேர்வு முடிவுகளை அறிவிக்க முயற்சிக்கிறோம். ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பிரிவுக்கும் ஐசிஎஸ்இ/ஐஎஸ்சி பிரிவுக்கும் ஜூலை 1 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடத்தப்படும். அது போல் நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதியும், ஜேஇஇ ஜூலை 18 முதல் 23 ஆம் தேதியும் நடத்தப்படும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காய்ச்சல் இருக்கிறதா என பார்க்கப்படும். 3 பேர் அமரும் பெஞ்சில் இருவர் மட்டுமே அமர வைக்கப்படுவர் என்றார்.

    English summary
    Schools will be reopened after August 2020, says Minister Ramesh Pokriyal. Social distancing will be maintained.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X