டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவின் ஆட்டம்.. தாமதமாகுகிறதா பள்ளிகள் திறப்பு.. மத்திய அரசு கூறியது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்து கொள்ள மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்கொல்லி நோயான கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டிவிட்டது. பலியானோரின் எண்ணிக்கையும் 100-ஐ தாண்டியது. இந்த நிலையில் இந்தியாவில் வைரஸ் அதிகமாக பாதித்தோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2ஆம் இடத்தில் தமிழகமும் உள்ளது.

இந்த நிலையில் டெல்லி, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தியது.

 எப்ப பாரு எப்ப பாரு "டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவர்கள்" என சொல்ல வேணாம்.. தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அமைச்சரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டம்

அது போல் வழிப்பாட்டு தலங்கள், மால்களை திறப்பதற்கான கட்டுப்பாட்டையும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என மத்திய அரசுக்கு அந்த அமைச்சரவை கூட்டம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

கொரோனா வைரஸ் 3ஆவது கட்டத்திற்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது. கோவிட் 19 நோயாளிகளுக்காக கோவிட் கேர் சென்டர்களை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த மருத்துவ வசதிகள் முழு மருத்துவ வசதிகளாக இருக்கலாம். மருத்துவமனையில் ஒரு கட்டடம் இதற்கென ஒதுக்கப்படுவதாகவும் இருக்கலாம்.

லாக் டவுன்

லாக் டவுன்

ஆனால் தனி நுழைவு வாயில், வெளியே செல்லும் வசதிகள், தனி ஐசியூக்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் என தனித்தனியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த 21 நாட்கள் லாக் டவுனை நீட்டிப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

English summary
Cabinet meeting recommends closure of all educational institutions and restrictions to be extended till May 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X