டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீசன் தொடங்கியது.. கொரோனா நெருக்கடியில் ஆட் ஆன் போல் ஒட்டிக் கொள்ளவிருக்கும் டெங்கு.. சவால்கள் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்கக் கூடும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் பரவி வருகிறது. இதுவரை 8 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் டெங்கு காய்ச்சல் சீசனும் தொடங்கியுள்ளது.

கொரோனா நெருக்கடி நேரத்தில் டெங்கு காய்ச்சல் தொற்றையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது இந்திய சுகாதாரத் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி! கொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி!

பரிசோதனை

பரிசோதனை

இரு நோய்களுக்கும் இரு மாறுபட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பிரபல தொற்றுநோயியல் துறை நிபுணர் ஜமீல் கூறுகையில் 2016-2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது டெங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை தாக்குகிறது.

இந்தியா

இந்தியா

டெங்கு வைரஸ் தென் இந்தியாவில் பருவமழை காலத்திலும் ஆண்டு முழுவதும் உள்ளது. வட இந்தியாவில் குளிர்காலத்தில் தொடக்கத்தில் பரவிகிறது. இரு நோய்களுமே கடும் காய்ச்சல், தலைவரி, உடல்வலியை அறிகுறிகளாக கொண்டுள்ளன. இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று துணை. எனவே டெங்கு சீசன் கொரோனா நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.

கொசுக்கள்

கொசுக்கள்

டெங்கு சீசன் தொடங்கியதும் கொசுக்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று வேகமாக பரவுகிறது. ஒவ்வொரு சீசனிலும் டெங்கு நோயாளிகளால் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழியும். இந்த நிலையில் கொரோனாவும் தற்போது ஆட் ஆனாக சேர்ந்துள்ளதால் இரு அச்சுறுத்தல்கள் இருக்கும் போது என்ன நடக்கும்? இரு நோய்க்கும் கிட்டதட்ட ஒரே அறிகுறிகள்தான். எனவே ஒருவருக்கு வந்திருப்பது கொரோனாவா டெங்குவா என்பதை எப்படி வேறுபடுத்த முடியும்?

Recommended Video

    Vadivelu Dengue awareness version memes
    மருத்துவமனை

    மருத்துவமனை

    அந்த சமயத்தில் ஒருவருக்கு 3 நாளுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்படும் போது டெங்கு பரிசோதனையும் கொரோனாவுக்கான பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கும். கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் தற்போது டெங்கு நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்குமா, இல்லை மிகவும் தீவிர டெங்கு பாதித்தோர் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிப்பதா என பல குழப்பங்கள் உள்ளன என்றார் ஜமீல்.

    English summary
    Scientists worried about the season of two viruses. The Dengue season may severes Covid 19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X