கடல்பசு பாதுகாப்பில் தமிழக அரசு சூப்பர்.. மனசுவிட்டு பாராட்டிய ஜெய்ராம் ரமேஷ்!
புதுடெல்லி: கடல்பசுக்களைப் பாதுகாக்க தமிழக அரசு எடுத்திருக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா பகுதியில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவை பாதிக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ரோஜா நடனமாடியதாக வீடியோ.. மார்ஃபிங் செய்த 3 பேரை லபக்கிய போலீஸ்
கடல்பசு இனத்தை பாதுகாக்க "கடற்பசு பாதுகாப்பகம்" என்று மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என மானியக்கோரிக்கையில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

கடல் பசு
பல்லுயிர் பெருக்க திருத்தச் சட்ட மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு "கடற்பசு பாதுகாப்பகம்" மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

வளைகுடா
மன்னார் வளைகுடா மற்றும் பாக் கடற்பகுதியில் காணப்படும் கடற்பசு என்பது மிக அரிய வகை கடல்வாழ் பாலூட்டி. கடல்மாசு மற்றும் கடல் கடற்புல் அழிக்கப்படுவதால் இந்த இனம் அழிவை சந்தித்து வருகிறது. இதை பாதுகாக்கும் பொருட்டும் இந்தியாவில் முதல் முறையாக "கடற்பசு பாதுகாப்பகம் " இப்பகுதியில் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி
இந்நிலையில் கடல்பசுக்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ''கடல்பசு அதிகம் வாழும் மன்னார் வளைகுடாவில் கடலில் 500 சதுர கிலோ மீட்டர் பகுதியை பாதிக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடல்வாழ் பாலூட்டி விலங்குகளில் தாவரங்களை உண்டு வாழும் ஒரே உயிரினம் கடல் பசு மட்டும் தான்.

நடவடிக்கை
கடல்பசுக்களின் சரணாலயமாக அறிவித்ததால், அந்த கடல் பகுதியில் தாவரங்களும் பாதுகாக்கப்பட வாய்ப்பு உருவாகி இருக்கிறது. கடல்பசுப் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைபோல், இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அது காலத்தின் தேவை'' என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்தார்.