டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் ஒரு பொருளாதார புரட்சி.. நரசிம்மராவ் பாணியில் களமிறங்கும் மோடி.. வருமா அதிரடி மாற்றம்?

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதாரத்தில் தலைகீழ் மாற்றம் வேண்டும் என மோடி கூறுவதை பார்த்தால் 1991-ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் அரசு மேற்கொண்டது போன்று மற்றொரு பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    PM Modi announces Economic Pakckage | ரூ.20 லட்சம் கோடி நிவாரண பேக்கேஜ்.. பிரதமர் மோடி மாஸ் பிளான்

    2020-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மிகப் பெரிய நிதி நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதை போல் கடந்த 1991-ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான இந்திய அரசு சந்தித்தது.

    கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. தொழில்துறை, ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மூடப்பட்டதால் இந்தியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ஆனால் இதைவிட மனித உயிர்கள் முக்கியம் என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வரும் மே 17ஆம் தேதி முழு ஊரடங்கும் முடிவுக்கு வரும் என்ற நிலையில் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் முன் பேசினார்.

     20,000,000,000,000.. இது டிரெயிலர்தான்.. மெயின் பிக்சர் வரட்டும்.. 4வது லாக்டவுன் எப்படி இருக்கும்? 20,000,000,000,000.. இது டிரெயிலர்தான்.. மெயின் பிக்சர் வரட்டும்.. 4வது லாக்டவுன் எப்படி இருக்கும்?

    உள்கட்டமைப்பு

    உள்கட்டமைப்பு

    அப்போது அவர் ஆற்றிய 33 நிமிடங்கள், 55 வினாடிகள் கால அளவு கொண்ட உரையில் பொருளாதாரத்தை நிலை நிறுத்த சுயசார்பு இந்தியா திட்டம் குறித்து கூறினார். அவர் கூறுகையில் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்டவையே தற்சார்பு பொருளாதாரத்திற்கு அடிப்படைகள் ஆகும். இதில் உள்கட்டமைப்புதான் இந்தியாவின் அடையாளம்.

    தலைகீழ் மாற்றம்

    தலைகீழ் மாற்றம்

    உள்நாட்டு தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை கொரோனா கற்றுக் கொடுத்துவிட்டது. இனி உள்நாட்டு தயாரிப்புகளை பெருமையுடன் வாங்குவோம் என்றார். மேலும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு (அதாவது மொத்த ஜிடிபியில் 10 சதவீதம்) சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படுகிறது. பொருளாதாரம் தலைகீழ் மாற்றத்துடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

    அன்னிய செலாவணி சிக்கல்

    அன்னிய செலாவணி சிக்கல்

    இது போன்ற ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்கெனவே இந்தியா கடந்த 1991-ஆம் ஆண்டு சந்தித்துள்ளது. அப்போது காங்கிரஸ் ஆட்சி, பிரதமராக நரசிம்மராவும் நிதி அமைச்சராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். அதற்கு முன்பாக 1980ஆம் ஆண்டு கடைசியில் அன்னிய செலாவணி சிக்கல்கள் தொடங்கியிருந்தன. பின்னர் 1990-ஆம் ஆண்டு குவைத் போரும் 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் படுகொலையும் அந்த சிக்கலை மேலும் அதிகரித்தது.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    இந்த நிலையில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு சில துணிகரமான நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அப்போது நரசிம்மராவ் அரசில் நிதியமைச்சராக அங்கம் வகித்த மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து அன்னிய செலாவணி சிக்கல்களும் தீர்ந்தன.

    இந்திய பொருளாதாரம்

    இந்திய பொருளாதாரம்

    பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒரு தலைகீழ் மாற்றம் வேண்டும் என பிரதமர் கோரியிருப்பது மட்டும் கைகொடுத்தால் அது இரண்டாவது பொருளாதார சீர்திருத்தமாக நிச்சயம் உருவெடுக்கும். அதாவது இந்திய பொருளாதாரத்தையே மறுசுழற்சி சீர்திருத்தம் மூலம் மீண்டும் தொடங்குவதைத்தான் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    நரசிம்மராவுக்கு மன்மோகன் சிங் கிடைத்து அதன் மூலம் ஏற்பட்ட அந்த பொருளாதார மாஜிக்கை மீண்டும் நிகழ்த்த பிரதமர் மோடி விரும்புகிறார். அதற்கான கோணத்திலும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனாவை மட்டுமல்லாமல் பொருளாதார சரிவையும் வென்று இந்தியாவை எழுப்பி நிறுத்துவாரா மோடி என்பதை பொறுத்திதருந்து பார்க்க வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்பிக்கையோடு இருப்போம்.

    English summary
    Second Economic reforms will be formed in 2020? like first reforms made by P.V.Narasimha Rao government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X