டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் எக்சாமுக்கு ரெடியாகுங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு

கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி இறுதி தேர்வு...மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம்!கல்லூரி இறுதி தேர்வு...மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம்!

என்ன முடிவு

என்ன முடிவு

முக்கியமாக யுஜி கலை படிப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளும்ரத்து செய்யப்பட்டது.,பொறியியல் படிப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு தேர்வுகளும், பிஜி படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு மாநிலம்

வேறு மாநிலம்

தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இதேபோல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு இல்லை என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கும் நடந்து வருகிறது.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

இந்த செமஸ்டர் தேர்வு ரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யுஜிசி ஏற்கனவே தெரிவித்து விட்டது. இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில், கல்லூரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் யுஜிசிக்கு மட்டுமே இருக்கிறது. இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். இதில் மாற்று முடிவு இல்லை.

கண்டிப்பாக நடக்கும்

கண்டிப்பாக நடக்கும்

பட்டம் வழங்குவதற்கான விதிகளை பல்கலைக்கழக மானியக் குழுவால் மட்டுமே பரிந்துரைக்க முடியும். எந்த விதமான மாநில அரசு அதிகாரமும் இதில் தலையிட முடியாது. தேர்வு எழுதவில்லை என்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது. தேர்வு கிடையாது என்பது மாணவர்களின் நலனுக்கான அறிவிப்பாக இருக்க முடியாது, அதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

English summary
College Semesters exams for final year students to be held for sure says UGC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X