• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர், அரசியல்வாதி.. மீண்டும் மத்தியமைச்சரானார் ரவி சங்கர் பிரசாத்

|

டெல்லி: மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 1954ம் ஆண்டு பிறந்துள்ளார் இவருக்கு தற்போது 64 வயதாகிறது.

ரவி சங்கர் பிரசாத் அரசியல்வாதி மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும் ஆவார். இவரது மனைவி பெயர் மாயா ரவி சங்கர் பிராத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரவி சங்கர் பிரசாத் பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஹான்ஸ், எம்.ஏ. (அரசியல் அறிவியல்) மற்றும் எல்.எல்.பி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்

Senior advocate Ravi Shankar Prasad of the Supreme Court.. became again Union Minister again

இவரது தந்தை தாகூர் பிரசாத் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார். மேலும் தாகூர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தின் முன்னணி நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர் ஆவார்.

1980ம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ரவி சங்கர் பிரசாத் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். பின்னர் 1999-ல் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதற்கு பின்னர் கடந்த 2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார் ரவி சங்கர் பிரசாத்.

பீகார் மாநிலத்தில் லாலுவின் ஆட்சியின் போது நடைபெற்ற காவல்நடை தீவனம் தொடர்பான ஊழல் வழக்கில், லாலு பிரசாத் உள்ளிட்ட பலருக்கு எதிராக வாதடிய முக்கிய வழக்கறிஞர் ரவி சங்கர் பிரசாத் ஆவார். மேலும் ராமர் கோசவில் தொடர்பான முக்கிய வழக்கு ஒன்றிலும் வழக்கறிஞராக இருந்து வாதாடியுள்ளார். பாஜக முதத் தலைவர் அத்வானிக்காக பல்வேறு வழக்குககளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

டீக்கடை மாஸ்டர் டூ ராஷ்டிரபதி பவன்.. சொல்லி வைத்து வென்று காட்டிய பிரதமர் மோடி

அரசியல் வாழ்வில் காலடி எடுத்த வைக்க நினைத்த ரவி சங்கர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் புரட்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக போராடியதற்காக ரவி சங்கர் பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

1995-ல் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளின் உயர் கொள்கைக் குழுவில் உறுப்பினராக இருப்பதற்கு முன்பு, மாணவர், இளைஞர் அணி மற்றும் பிரதான கட்சி அமைப்பில் பல பொறுப்புகளை வெற்றிகரமாக கையாண்டார். 2000-ம் ஆண்டில் முதலில் எம்பி-யான இவர் 2001ம் ஆண்டி ல் தேசிய ஜனநாயக கூடட்ணி அரசில் நிலக்கரி அமைச்சராக ஆனார்.

2002 ஜூலையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2006 ல், அவர் ராஜ்ய சபா உறுப்பினராக மாறியது மட்டுமல்லாமல் பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். பின்னர் 2012 -ல் அவர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.

2014ம் ஆண்டு பாஜக பெற்ற அபார தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி, அவருக்கு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றை நிர்வகிக்க ஒன்றுக்கு மேற்பட்ட போர்ட்ஃபோலியோக்களை வழங்கினார். ரவிசங்கர் பிரசாத் தனது பதவி காலத்தில் எடுத்த சில முடிவுகள் மற்றும் முன்முயற்சிகள் இந்தியாவில் மின்வணிகத்தை ஊக்குவிக்க சிறப்பான வழிவகுத்தன.

மாநிலங்களவை எம்பியாக இருந்த ரவி சங்கர் பிரசாத்திற்கு பீகார் மாநிலம் பாட்னா சாகிப் பகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய சத்ருகன் சின்ஹாவை, சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து ரவி சங்கர் பிரசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மோடி அமைச்சரவையில் மீண்டும் இன்று மத்திய அமைச்சராக ரவி சங்கர் பிரசாத் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Senior BJP leader Ravi Shankar Prasad, who has been appointed Union Minister in the Cabinet again, was born in Patna, Bihar in 1954, now 64 years old
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more