டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சிகிச்சை பலன் இன்றி குர்கான் மருத்துவமனையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியின் நெருங்கிய அரசியல் ஆலோசகருமான அகமது படேல் (71 வயது), கடந்த ஒரு மாதத்திற்கு பின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

 Senior Congress leader Ahmed Patel dies at 71 after Covid infection

இதையடுத்து டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள பிரபல மருத்துவமனையில் அகமது படேல் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் படிப்படியாக அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து உடல் நிலை மோமடைந்தது.

இதன் காரணமாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அகமது படேல் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இந்த தகவலை அவர மகன் பைசல் படேல் ட்வீட்டில் தெரிவித்துள்ளார். தந்தையின் மரணத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பைசல் விடுத்துள்ள வேண்டுகோளில்,கூட்டங்களை தவிர்த்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

அகமது படேல் குஜராத் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

English summary
Senior Congress leader Ahmed Patel, one of Sonia Gandhi's closest political advisers has died. He was 71. He had been in a Gurgaon hospital since his health worsened after a Covid infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X