டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய தலைமை தேர்தல் ஆணையரானார் சுனில் அரோரா.. முக்கியமான கட்டத்தில் பணிகளை தொடங்கினார்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சுனில் அரோரா பொறுப்பேற்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுனில் அரோரா புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்பு

    டெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சுனில் அரோரா பொறுப்பேற்றார்.

    தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவிக்காலம் சனிக்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், இன்று சுனில் அரோரா பதவியேற்றார்.

    Senior IAS officer Sunil Arora takes charge as the new Chief Election Commissioner

    62 வயதாகும் சுனில் அரோரா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருந்தார். அதற்கு முன்பாக தகவல் தொடர்பு மற்றும் செய்தி விளம்பரத்துறை செயலாளராகவும், மத்திய அமைச்சகத்தின் திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

    1980ஆம் ஆண்டு ராஜஸ்தான் ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சுனில் அரோரா, நிதித்துறை, ஜவுளித்துறை, திட்ட கமிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    தலைமை தேர்தல் ஆணையர் அதிகபட்சமாக ஆறு வருடங்கள் அந்த பதவியில் நீடிக்க முடியும், அல்லது 65 வயது வரை பதவி வகிக்க முடியும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவி வகிக்க முடியும்.

    அந்த வகையில், இன்று தேர்தல் ஆணையாராக பொறுப்பேற்றுள்ள சுனில் அரோரா, இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் தொடர முடியும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது.

    ஜம்மு காஷ்மீர். ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Senior IAS Officer Sunil Arora was appointed as the Chief Election Commissioner of India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X