டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட்டர்னி ஜெனரல் பதவி.. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய அரசு கூறியதை மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி மறுத்துள்ளார்.

 Senior lawyer Mukul Rohatgi refuses to accept the post of Attorney General

இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீலான 91 வயது நிரம்பிய கேகே வேணுகோபால் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017 முதல் இந்த பதவியில் செயல்பட்டு வருகிறார். அட்டர்னி ஜெனரல் பதவி என்பது பொதுவாக 3 ஆண்டு காலத்துக்கு உரியது.

அதன்படி கேகே வேணுகோபால் பதவிக்காலம் 2020ல் முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகள் வரை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் ஆன நிலையில் கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி ஜூன் மாதத்தில் இருந்து கூடுதலாக 3 மாதம் வரை கேகே வேணுகோபால் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வருகிறது. இந்த பதவி நீட்டிப்பு காலம் என்பது வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அடுத்த அட்டர்னி ஜெனரல் நியமனம் தொடர்பான நடைமுறைகள் தொடங்கின.

காங்கிரஸ் 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்! ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு காங்கிரஸ் 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்! ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு

அதன்படி இந்திய அட்டர்னி ஜெனரலாக 67 வயது நிரம்பிய மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கியை மத்திய அரசு தேர்வு செய்தது. இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முகுல் ரோஹத்கி அட்டர்னி ஜெனரல் பதவியை ஏற்க மறுத்துள்ளார். இதில் எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அட்டர்னி ஜெனரலாக பதவியேற்க மறுப்பு தெரிவித்து முகுல் ரோஹத்கி, இந்தியாவின் 14 வது அட்டர்னி ஜெனரலாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். அதாவது கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் வரை இவர் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். அதன்பிறகு ராகுல் ரோஹத்கிக்கு பதில் கேகே வேணுகோபால் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தற்போது அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் அந்த பதவிரை ராகுல் ரோஹத்கி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
KK Venugopal's tenure as Attorney General of India ends on 30th. In this situation, senior lawyer Mukul Rohatki has denied that the central government has asked him to accept the post of the new attorney general.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X