டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன செய்தாலும் எழும்பாத பங்குச் சந்தை.. ரிசர்வ் வங்கி சலுகை அறிவிப்புக்கு பிறகும் சென்செக்ஸ் சரிவு

Google Oneindia Tamil News

டெல்லி: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைப்பதாக, அறிவித்துள்ள போதிலும் பங்குச் சந்தையில் பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. இன்றும் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது இதற்கு ஒரு உதாரணம்.

மந்தநிலை பொருளாதாரத்தை வேகம்பிடிக்க செய்வதற்காக ரிசர்வ் வங்கி இன்று சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. தனது நாணயக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் நிருபர்களிடம் பேசுகையில், ரெப்போ விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் நிதி நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள் குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.

Sensex and Nifty showing negative signal to RBI announcement

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு காரணமாக, பங்குச்சந்தை எழுச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார வல்லுனர்களிடம் இருந்தது. ஆனால், அதற்கு பிறகு சென்செக்ஸ் 130 புள்ளிகள் சரிவடைந்து 36,847.09 புள்ளிகளாக இருந்தது.

நிப்டி, 10,900 என்ற அளவில், வணிகமாகிக்கொண்டு இருக்கிறது. முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் பங்குச் சந்தை ரிவர்ஸ் கியரில் செல்வது முதலீட்டாளர்கள் நடுவே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் முதல், 24 மணி நேரமும் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. ஆர்பிஐ அதிரடி டிசம்பர் முதல், 24 மணி நேரமும் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. ஆர்பிஐ அதிரடி

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளால், முதலீட்டாளர்கள் திருப்தி அடையவில்லை என்பதை பங்குச் சந்தையின் வீழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

English summary
The Sensex is down 130 points to 36,847.09 while the Nifty is trading near the 10,900-mark. A look at LIVE Sensex heatmap.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X