டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து.. 2 டோஸின் விலை ரூ.1000.. நல்ல தகவல் சொன்ன சீரம் சிஇஒ பூனவல்லா

Google Oneindia Tamil News

டெல்லி: இறுதி சோதனை முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பொறுத்து, 2021பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறினார்.

பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என்றும் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சம் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும் என்றும் பூனவல்லா கூறினார்.

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா., எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் 3-4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் என்றார்.

 3 மாசம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. முதலில் யாருக்கெல்லாம் கிடைக்கும்- ஹர்ஷ் வர்த்தன் விளக்கம் 3 மாசம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. முதலில் யாருக்கெல்லாம் கிடைக்கும்- ஹர்ஷ் வர்த்தன் விளக்கம்

வயதானவர்களுக்கு

வயதானவர்களுக்கு

இது தொடர்பாக அவர் கூறுகையில். தற்போது வேக்சின் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் வேக்சின் கிடைக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்த வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வேக்சின் கிடைத்துவிடும். பின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு வேக்சின் கொடுக்க முடியும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வேக்சின் கொடுக்க முடியும். ஆனால் இதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.

கொரோனா மருந்து விலை

கொரோனா மருந்து விலை

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையின் இறுதி முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களை பொறுத்து 2021பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம். பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என்றும் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சம் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும். அனைவருக்கும் 2024ம் ஆண்டில் தடுப்பூசி கிடைத்துவிடும்.

எதிர்வினைகள் இல்லை

எதிர்வினைகள் இல்லை

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வயதானவர்களிடம் மிகச் சிறப்பாக செயல்படுவதை இதுவரை நிரூபித்து வருகிறது இந்த தடுப்பூசிகள் நீண்ட காலத்திற்கு உங்களைப் பாதுகாக்கப் போகிறதா என்பதை காலம் மட்டுமே சொல்லும். அதற்கு யாரும் பதிலளிக்க முடியாது. பெரிய புகார்கள், எதிர்வினைகள் அல்லது பாதகமான நிகழ்வுகள் எதுவும் இல்லை இந்திய சோதனைகளின் செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளிவரும்.

 இங்கிலாந்து ஒப்புதல்

இங்கிலாந்து ஒப்புதல்

இங்கிலாந்து அதிகாரிகளும் ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனமும் (ஈ.எம்.இ.ஏ) அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கேட்கப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு கிடைக்கும். பாதுகாப்புத் தரவு வெளிவரும் வரை குழந்தைகள் இன்னும் சிறிது காலம் கொரோனா மருந்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்" என்றார்.

English summary
Serum Institute of India's CEO Adar Poonawalla has said the Oxford Covid-19 vaccine should be available for healthcare workers and elderly people by around February 2021 and by April for the general public, and will be priced at a maximum of Rs 1,000 for two necessary doses for the public, depending on the final trial results and regulatory approvals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X