டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார்… முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார் முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது.

Set To Be First Lokpal panel head by Pinaki Chandra Ghose

இந்த மசோதா கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது,

அதன்படி, லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மக்களவையில் ஏதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு நீதிபதியாக முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகியை பரிந்துரைத்தார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழலில் சிறப்பு அழைப்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை மத்திய அரசு அழைத்தது. ஆனால் அந்த அழைப்பை மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்தார்.

அடப்பாவமே.. தினகரனை பார்த்து திமுகவும், அதிமுகவும் இப்படியா பயந்து ஓடுவது? அடப்பாவமே.. தினகரனை பார்த்து திமுகவும், அதிமுகவும் இப்படியா பயந்து ஓடுவது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்பால் தலைவராகும் பினாகி சந்திர கோஸ், உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றி 2017-ல் ஓய்வு பெற்றார் . ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர் பி.சி. கோஸ். தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

English summary
First Lokpal panel head by Pinaki Chandra Ghose
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X