டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒருநாள் பிற்படுத்தப்பட்ட ஜாதி.. மறுநாள் பட்டியலினம்.. மீண்டும் பழைய ஜாதி.. உ.பி மக்களின் நிலை இது

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேசத்தில், ஓபிசி பிரிவை சேர்ந்த 17 ஜாதிகளை எஸ்சி பிரிவில் சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த முடிவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மாநில அரசிடம் பதில் கோரியுள்ளது. இதுபோன்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றம் யோகி அரசுக்கு தெரிவித்துள்ளது. எஸ்.டி / எஸ்.சி ஜாதி பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் ஹைகோர்ட் தெரிிவித்துள்ளது.

Setback for Yogi Adityanath as Court stays caste move, here is the detail

உத்தரபிரதேசத்தில், கடந்த பல தசாப்தங்களாக இந்த 17 சாதிகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் இருந்து பட்டியல் ஜாதி பிரிவில், சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முந்தைய பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி அரசுகளும் இதை முயற்சித்தன. ஆனால் மாநில அரசின் அதிகாரத்திற்கு வெளியே முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால், அதைச் செயல்படுத்த முடியவில்லை.

சமீபத்தில், யோகி அரசு ஜூன் 24ம் தேதியன்று ஒரு ஆணையை வெளியிட்டது . ஓபிசி பிரிவை சேர்ந்த 17 ஜாதிகளை மீண்டும் எஸ்சி பிரிவில், சேர்க்க ஏற்பாடு செய்தது.

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம்மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம்

மாவட்டங்களின் டி.எம்-க்கள், இவர்களுக்கு, பட்டியல் சாதி சான்றிதழ்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதித்த பின்னர், இப்போது இந்த 17 ஜாதிகளின் நிலை திரிசங்கு சொர்க்கம் போல மாறிவிட்டது.

இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தபோது, ​​நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நீதிபதி ராஜீவ் மிஸ்ரா ஆகியோரின் டிவிஷன் பெஞ்ச் யோகி அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

அரசின் முடிவை நீதிமன்றம் தவறாக கருதுகிறது. இதுபோன்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath's plan to include 17 OBCs or Other Backward Classes in the list of Scheduled Castes was put on hold by the Allahabad High Court on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X