டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வளர்ச்சி திட்டங்களை தாண்டி.. கெஜ்ரிவாலுக்கு கை கொடுத்த ஷாகீன்பாக்.. தீம் பாடல் நிஜமானதன் பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓக்லா தொகுதியில் வரலாற்று வெற்றி பெற்ற ஆம் ஆத்மி |Amanatullah Khan wins Okhla assembly seat

    டெல்லி: டெல்லியில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களையும் தாண்டி கெஜ்ரிவாலுக்கு ஷாகீன்பாக் போராட்டம் கை கொடுத்துள்ளது. தொடரட்டும் கெஜ்ரிவால் என்ற தீம் பாடல் நிஜமானதற்கு காரணமும் இதுதான்.

    டெல்லியில் மக்கள் இதுவரை காணாத மாற்றத்தை இந்த நான்கரை ஆண்டுகளில் கொடுத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினார். இதற்காக பள்ளி கல்வித் துறை அமைச்சரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா பள்ளிகளுக்கு நேராக சென்று ஆய்வு நடத்தினார். இது பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    அது போல் இலவச குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்கினார். கல்வி, குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசிய தேவைகளை மக்களுக்கு தரமாக வழங்கியதால் கெஜ்ரிவால் வான் அளவுக்கு உயர்ந்தார்.

    தீம் பாடல்

    ஆம் ஆத்மிக்கு பிரசாந்த் கிஷோர்தான் வியூகம் வகுத்து தந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக கிஷோரின் ஐபேக் நிறுவனம் கெஜ்ரிவாலின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்தது. சமூக வலைதளங்களிலும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். கெஜ்ரிவாலுக்காக கிஷோர் தீம் பாடலை அமைத்து கொடுத்தார்.

    பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    லஹே ரஹோ கெஜ்ரிவால் என தொடங்கும் பாடல் அது. அதாவது தொடரட்டும் கெஜ்ரிவால் ஆட்சி என தொடங்கும் பாடல் பிரசார கூட்டங்கள், பொதுக் கூட்டங்களில் ஒளிபரப்பப்பட்டது. இவற்றையும் தாண்டி ஷாகீன்பாக் போராட்டம் களமும் கெஜ்ரிவாலுக்கு வெற்றியை தேடி தந்தது. பாஜக தலைவர்கள் எதை பேசினாலும் அதற்கு பதிலளிக்காமல் வளர்ச்சித் திட்டங்களை மட்டுமே மக்களிடம் எடுத்துரைக்குமாறு கிஷோர் அறிவுறுத்தியிருந்தார்.

    ஆம் ஆத்மி தலைவர்கள்

    ஆம் ஆத்மி தலைவர்கள்

    மேலும் ஷாகீன்பாக் போராட்டத்தை பாஜக மத ரீதியில் அணுகியது. கெஜ்ரிவாலை பயங்கரவாதி என பாஜக விமர்சனம் செய்தது. இதை மக்களின் பார்வை ஆம் ஆத்மி பக்கம் திரும்பியது. அந்த சம்பவம் வரை வளர்ச்சித் திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றி மட்டுமே பேசி வந்த கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி தலைவர்களும் பாஜகவை வைத்தே அவர்கள் கண்ணை குத்தினர்.

    பயங்கரவாதி

    பயங்கரவாதி

    ஆம், கெஜ்ரிவால் உங்கள் மகனா இல்லை பயங்கரவாதியா என கேள்வி எழுப்பினர். இது போன்று ஷாகீன் பாக் போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றில் கெஜ்ரிவால் எடுத்த நிலைப்பாட்டிற்கு பக்கபலமாக இருந்தவர் கிஷோர்தான். மோடியை எதிர்க்கும் ஆம் ஆத்மிக்கு வியூகம் வகுத்து தந்ததாலேயே அவரை நிதிஷ்குமார் கட்சியிலிருந்து வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Apart from developmental work in Delhi, Theme song works out better for Kejriwal which was designed by Prashant Kishore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X