டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் முடிவு தவறானது... ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனத்திற்கு சு.சாமி எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனத்திற்கு சு.சாமி எதிர்ப்பு

    டெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகந்ததாஸை மத்திய அரசு நியமித்தது தவறான முடிவு என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசிற்கும் இடையே உரசல் இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக அவர் விளக்கமளித்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

     Shaktikanta Das being appointed as RBI Governor is wrong says BJP MP Subramanian Swamy

    இந்த சூழலில், முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி கந்ததாஸை புதிய கவர்னராக மத்திய அரசு நியமித்தது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சக்தி கந்ததாஸ், தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார், அதன்பின் சக்தி கந்ததாஸ் மத்தியஅரசு பணிக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்தி கந்ததாஸ் நியமிக்கப்பட்டதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்தி கந்ததாஸை நியமித்தது தவறான முடிவு. ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்து பல்வேறு முறைகேடு செயல்களில் ஈடுபட்டவர்.

    அதிமுகவை வைத்து நாடாளுமன்றத்தை சீர்குலைக்கிறது மத்திய அரசு.. திரினமூல் குற்றச்சாட்டு அதிமுகவை வைத்து நாடாளுமன்றத்தை சீர்குலைக்கிறது மத்திய அரசு.. திரினமூல் குற்றச்சாட்டு

    ப.சிதம்பரத்தை நீதிமன்ற வழக்குகளில் இருந்து காப்பாற்றியவர் சக்தி கந்ததாஸ். எதற்காக அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    he has worked closely in corrupt activities with P Chidambaram and even tried to save him in court cases. I don't know why this was done, I have written a letter to PM against this decision.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X