டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க வரணும்.. 3 முக்கிய தலைவர்களை போன் போட்டு வளைத்த சரத் பவார்.. பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்!

லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதிய திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாஜகவுக்கு சிம்ம சொப்பனம் இவர்தான்!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதிய திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மொத்தம் 21 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைக்க இருக்கிறார்கள்.

    ஆனால் காங்கிரஸ் தலைமையில் இந்த கூட்டணி அமையவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்று இருக்கும் மூன்றாவது கூட்டணியாக ஒரு கூட்டணியை உருவாக்க இருக்கிறார்கள்.

    பரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.? பரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.?

    இடம்பெறவில்லை

    இடம்பெறவில்லை

    ஆனால் இந்த கூட்டணியில் மூன்று முக்கிய கட்சிகள் இடம்பெறுவது இன்னும் சந்தேகமாக இருக்கிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த கூட்டணியில் சேர்வாரா என்பது கேள்வியாக உள்ளது. அதேபோல் ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இன்னும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவில்லை.

    இன்னொரு நபர்

    இன்னொரு நபர்

    அதேபோல் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான, நவீன் பட்நாயக் எந்த கூட்டணியில் இணைவார் என்பது கேள்வியாக உள்ளது . இவர் ஒடிசாவிற்கு எந்த கட்சி அதிக நன்மைகள் செய்வதாக வாக்குறுதி வழங்குகிறதோ அந்த கட்சிக்கு, ஆதரவு அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

    சரத் பவார்

    சரத் பவார்

    ஆனால் இவர்கள் மூவரிடமும் 20 கட்சியை சேர்ந்த தலைவர்கள் பெரிய அளவில் நட்பில் இல்லை. இவர்கள் மூவரிடமும் நட்பாக இருக்கும் ஒரே தலைவர் என்று பார்த்தால் அது சரத் பவார்தான். தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இதனால் இவர்கள் மூவரிடமும் போன் செய்து பேசி இருக்கிறார்கள். இவர்கள் மூவர்தான் கிங் மேக்கர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    ஓகே சொல்லி இருக்கிறார்கள்

    ஓகே சொல்லி இருக்கிறார்கள்

    இந்த நிலையில் சரத் பவாரின் போன் கால் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தை கொஞ்சம் சுமுகமாக முடிந்துள்ளது என்கிறார்கள். சந்திரசேகர ராவ் மற்றும் நவீன் பட்நாயக் இருவரும் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள். இதுதான் பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் இன்னும் ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே போன் காலை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    தற்போது ஜெகன் மோகன் ரெட்டி பயணத்தில் இருப்பதால் அவரிடம் சரத் பவார் பேச முடியவில்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் ரெட்டி பெரும்பாலும் பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்க முயற்சி செய்தாலும் கூட செய்வார் என்று கூறுகிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற கூட வாய்ப்பு இருக்கிறது.

    English summary
    NCP chief Sharad Pawar called three major leaders for opponents' post-poll alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X