டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவங்க 3 பேருக்கு இடையில்தான் பிரதமர் பதவிக்கு ரேஸ்.. சரத்பவார் கணிப்பு..யாரை சொல்கிறார் தெரியுமா?

லோக்சபா தேர்தலுக்கு பின் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உட்பட மூன்று பேரில் ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கணித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் பிரதமரை சரத்பவார் கணித்து இருக்கிறார்.

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உட்பட மூன்று பேரில் ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கணித்து இருக்கிறார்.

    லோக்சபா தேர்தல் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. 3 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் யார் இந்த தேர்தலில் வெற்றிபெறுவார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளின் கூட்டணியும் மெஜாரிட்டி பெறவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

    குழப்பம்

    குழப்பம்

    பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் மாநில கட்சிகள் யாருக்கு ஆதரவு தருகிறதோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று பலர் கணித்து வருகிறார்கள். இதனால் தற்போது பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் மிக முக்கியமான கட்சிகளாக உருவெடுத்து உள்ளது.

    சரத்பவார் பேட்டி

    சரத்பவார் பேட்டி

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக்சபா தேர்தல் முடிவு கண்டிப்பாக பாஜகவிற்கு சாதகமாக வராது. பாஜகவால் மெஜாரிட்டி பெற முடியாது. அதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரில் ஒருவர்தான் பிரதமராக வருவார்கள்.

    உள்ளது

    உள்ளது

    இவர்கள் மூவருக்குத்தான் பிரதமர் ஆக அதிக தகுதி இருக்கிறது. இவர்கள் மூவரில் ஒருவர்தான் நாட்டின் அடுத்த பிரதமர். இவர்கள் மூவருக்கும் மாநிலங்களை ஆண்ட அனுபவமும் இருப்பதால் இவர்கள்தான் நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும்.

    ராகுல் ஏன் இல்லை

    ராகுல் ஏன் இல்லை

    இதில் நான் ராகுல் காந்தியை குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம் இருக்கிறது. ராகுல் காந்தியே பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை என்று பல முறை குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஒருவர்தான் கண்டிப்பாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்று, சரத்பவார் கூறியுள்ளார்.

    English summary
    NCP leader Sharad Pawar says that He backs Mamata, Mayawati and Chandrababu Naidu for PM Post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X