டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி!

இன்று பிரதமர் மோடியை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்க பாஜக பிளானா?

    டெல்லி: இன்று பிரதமர் மோடியை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார்.

    மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பார், இல்லை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்குமா? மீண்டும் சட்டசபை தேர்தல் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. அங்கு பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் சேர முடியாமல் சிவசேனா குழம்பிக் கொண்டு இருக்கிறது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவிற்கு பச்சை கொடி காட்டாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதனால் சிவசேனாவின் எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொறுமையை இழந்துள்ளனர்.

    இழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்!இழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்!

    பாஜக மீட்டிங்

    பாஜக மீட்டிங்

    ஒரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் உடன் சிவசேனா சேர முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக தன் பக்கம் இழுக்க பார்க்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

    இன்று சந்திப்பு

    இன்று சந்திப்பு

    இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார். இவரின் தலைமையில் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரும் மோடியை சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிரா விவசாயிகள் பிரச்சனை குறித்து இதில் பேச இருக்கிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அதே சமயம் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் சூழ்நிலை குறித்தும் இவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கூட்டணி குறித்து சரத் பவார் உடன் தனியாக பேசுவார். பாஜக பக்கம் தேசியவாத காங்கிரசை இழுக்க அவர் முயற்சிப்பார் என்று கூறுகிறார்கள்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் விதிப்படி சிறப்பாக நடந்து இருக்கிறார்கள்.பாராளுமன்ற விதிகளை பின்பற்றி அவர்கள் சிறப்பாக நடந்து உள்ளனர். அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக கட்சியும் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    பாஜக திட்டம்

    பாஜக திட்டம்

    அதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பாஜக தயாராக இருக்கிறது என்கிறார்கள். அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார் போட்டியிட செய்வோம் என்று பாஜக மிகப்பெரிய ஆபரை அக்கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

    சிவசேனா

    சிவசேனா

    மகாராஷ்டிராவில் நடக்கும் இந்த அரசியல் மாற்றங்கள் சிவசேனாவிற்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் - பாஜக சேர்ந்தால் அது சிவசேனாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படும். அந்த மாநிலத்தில் சிவசேனா மொத்தமாக தனித்துவிடப்படும் நிலை இதனால் உருவாகும் .

    English summary
    Shiv Sena shocks as Sharad Pawar to meet PM Modi amidst Maharashtra political crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X