டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். நியமனம்- சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 பேரில் தப்பியவர்கள், தலைகுப்புற வீழ்ந்தவர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய நியமனங்களில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் மணீஷ் திவாரி, சசி தரூர், பிரித்விராஜ் சவாண், மிலிந்த் தியோரா, விவேக் தன்கா ஆகியோர் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் செயல்பாடுகளை விமர்சித்து 23 மூத்த காங். தலைவர்கள் கடிதம் எழுதியது அக்கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்திருக்கிறார்.

எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லைஎல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை

புதிய நியமனங்கள்

புதிய நியமனங்கள்

இந்த காங்கிரஸ் மாற்றங்கள், போர்க்கொடி தூக்கிய 23 பேரையும் கவனத்தில் வைத்தும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 23 தலைவர்களை 3 பிரிவாக பிரித்து பந்தாடியிருக்கிறது புதிய நியமனங்கள். கட்சிப் பதவிகளில் இருந்து தூக்கி அடிப்பு, கலகக் குரல் எழுப்பியதால் முக்கியத்துவம்-புதிய பதவிகளில் நியமனங்கள், எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே பதவிகளில் நீடிப்பது என்கிற 3 பிரிவுகளில் இவர்களை பிரித்திருக்கிறது புதிய நியமனங்கள்.

முக்கியத்துவம் பெற்ற முகுல் வாஸ்னிக்

முக்கியத்துவம் பெற்ற முகுல் வாஸ்னிக்

இதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது முகுல் வாஸ்னிக் நியமனம். குலாம்நபி ஆசாத் தலைமையில் திரண்ட 23 பேரில் முகுல் வாஸ்னிக்கும் ஒருவர். அவருக்கு காங். தலைவருக்கான ஆலோசனைக் குழுவில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி இல்லாத தருணங்களில் இந்த குழு ஆக்டிவ்வாக செயல்படும்.

ஏற்றம் பெற்ற கலகவாதிகள்

ஏற்றம் பெற்ற கலகவாதிகள்

குலாம்நபி ஆசாத்திடம் இருந்து பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கபில் சிபலுக்கான முக்கியத்துவமும் குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் போர்க்கொடி தூக்கிய தாரிக் அன்வர், முகுல் வாஸ்னிக், ஜிதின் பிரசாதா, ஆர்பிஎன் சிங் ஆகியோருக்கு புதிய நியமனங்களில் ஏறுமுகம்தான்.

Recommended Video

    கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் குஷ்பு நிற்கிறாரா?
    விழிபிதுங்கும் சீனியர்கள்

    விழிபிதுங்கும் சீனியர்கள்

    இத்தனைக்கும் தாரிக் அன்வர், சோனியா காந்தி அன்னியர் என விமர்சித்து கட்சியால் நீக்கப்பட்டவர். தற்போது குலாம்நபி ஆசாத்துடன் கை கோர்த்ததால் அவரை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கும் நியமனங்களில் இடம் கிடைத்திருக்கிறது. மணீஷ் திவாரி, சசி தரூர், பிரித்விராஜ் சவாண், மிலிந்த் தியோரா, விவேக் தன்கா ஆகியோருக்கான எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது சோனியாவின் நியமனங்கள்.

    English summary
    Senior Cong leaders Shashi Tharoor, Manish Tiwari, Prithviraj Chavan, Milind Deora face uncertain future in the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X