டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்'.. பாய்ந்த பாஜக.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சசி தரூர் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் சில பகுதிகள் இல்லாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக தவித்து போய் இருக்கும் காங்கிரஸ் கட்சியில், காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார்.

இதனால், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

ஜம்மு காஷ்மீர் இன்றி வரைபடம்

ஜம்மு காஷ்மீர் இன்றி வரைபடம்

இந்த தேர்தல் வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சசி தரூர் போட்டியிட உள்ளார். இதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கும் சசி தரூர் தேர்தல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இதில் இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகள் இடம் பெறாமல் இருந்தது. இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இன்றி இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பட்டமாக இந்திய வரைபடம் தவறாக வெளியிடப்பட்டு இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதையடுத்து, தவறை திருத்திக்கொண்ட சசி தரூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் முழு பகுதிகளும் அடங்கிய சரியான இந்திய வரைபடத்தை திருத்தி வெளியிட்டார். இந்த விவகாரம் குறித்து கூற காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து விட்டது. சசி தரூரின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இடம் பெறாத இந்திய வரைபடத்தை வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

 மிகப்பெரிய பிழை

மிகப்பெரிய பிழை

குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து விமர்சித்தனர். இது மிகப்பெரிய பிழை என்றும்... வெட்ககேடான செயல்.. எனவும் கடுமையாக விமர்சித்து இருந்தனர். பிரித்தாளும் கொள்கையுடன் இருப்பதாக கடுமையாக விமர்சித்து இருந்தனர். இதனிடையே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

 களங்கப்படுத்த முயற்சிக்கிறது

களங்கப்படுத்த முயற்சிக்கிறது

அப்போது பாஜகவை கடுமையாக தாக்கியிருக்கும் ஜெய்ராம் ரமேஷ், ''பாரத் ஜோடோ யாத்திரை தற்போது கர்நாடாவில் நடைபெறுகிறது. இதனால், அச்சம் அடைந்துள்ள பாஜக, அற்ப விஷயங்களை கூட பெரிதுபடுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை களங்கப்படுத்த முயற்சிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார். இந்திய வரைபடத்தை திருத்தி சரியாக சசி தரூர் தரப்பு வெளியிட்டது. ஆனாலும் இந்த விவகாரம் குறித்து எந்த விளக்கத்தையும் சசி தரூர் அளிக்கவில்லை.

இது முதல் முறை அல்ல

இது முதல் முறை அல்ல

முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், இதேபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் தடவை கிடையாது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு ஆவணம் வெளியிட்டு இருந்தார். அதிலும் , ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shashi Tharoor, who filed his nomination for the Congress president election, released an election manifesto. The absence of Jammu and Kashmir and Ladakh from the map of India has caused a lot of controversy. The BJP has been criticizing the Congress over this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X