டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: இதய பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்த டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவையொட்டி, 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி எஸ்கார்ட்ஸ் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் கட்சி வேறுபாடின்றி பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sheila Dikshits funeral with state honors .. Delhi Govt announced

பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள் ஷீலா தீட்சித்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஷீலா தீட்சித்தை இழந்து டெல்லி மக்கள் வாடுகின்றனர்.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி

அவரது ஆட்சி காலத்தில் டெல்லியை மேம்படுத்த நிறைய வேலைகளை செய்திருந்தார். நாங்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவரை சந்திக்கும் போதெல்லாம் என்னிடம் மிகுந்த அன்பாக இருப்பார்.

அவரது ஆத்மாவுக்கு அமைதியையும், இந்த இழப்பைச் சமாளிக்க அவரது குடும்பத்தினருக்கும் பலத்தையும் அளிக்க தாம் கடவுளிடம் பிரார்த்திப்பதாக கூறினார் கெஜ்ரிவால்.

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஷீலா தீட்சித்தின் உடலுக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்தின் மறைவையொட்டி இரண்டு நாள் மாநில துக்கத்தை அனுசரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்றார். மேலும் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் கூறினார்.

English summary
Former Delhi Chief Minister Sheila Dikshit, who died of a heart attack today, will be h 2 days state mourning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X