டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை (திருத்த) மசோதாவில் இலங்கை அகதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சி இன்று லோக்சபாவில் வலியுறுத்தியது.

மக்களவையில் குடியுரிமை (திருத்த) மசோதா தொடர்பான விவாதத்தில் இன்று பேசிய சிவசேனா எம்.பி. விநாயக் ரவுத், இந்த மசோதாவை எதிர்த்தாரா அல்லது ஆதரித்தாரா என்பதைக் குறிப்பிடவில்லை.

Shiv Sena insist Citizenship (Amendment) Bill should include Sri Lanka

இந்த மசோதாவின் அடிப்படையில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த முஸ்லீம் அல்லாதவர்களை இந்திய குடிமக்களாக ஏற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பெயரை இதில் சேர்க்கப்பட்டது ஏன் என புரியவில்லை. ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டிருந்தால், இலங்கையும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த ஓவைசி.. இந்து நாடாக்கும் முயற்சி.. காங்கிரசும் ஆவேசம்

நாட்டில் ஏற்கனவே வளங்களின் பற்றாக்குறை உள்ளது. வடகிழக்கில் அகதிகளை மீள்குடியமர்த்த முடியாது என்பதால், அவர்களை வேறு எங்கே மீள்குடியமர்த்தப்போகிறீர்கள். சட்டப் பிரிவு 370 பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீர் பண்டிட்கள் அந்த மாநிலத்தில் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. அதில் என்ன கொள்கை இருக்கிறது?

வட கிழக்கு விலக்கப்பட்டிருந்தாலும், நிலம் பறிக்கப்படும் என்று மக்கள் இன்னும் பயப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தானை நீக்குங்கள், இல்லையெனில் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அது நல்லது, ஆனால் அவர்களுக்கு 25 ஆண்டுகளாக வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Shiv Sena MP Vinayak Raut, who spoke in the debate on the Citizenship (Amendment) Bill in the Lok Sabha on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X