டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தன், வங்கதேசம் நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள இந்துக்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Shiv Sena may support Centre’s citizenship bill?

ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அம்மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ், என்சிபி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை சிவசேனா ஆதரித்தால் மகாராஷ்டிரா அரசில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சனையில் சிவசேனா இன்று முடிவை அறிவிக்கக் கூடும் என தெரிகிறது.

English summary
Shiv Sena will support the Central government’s Citizenship Amendment Bill in Parliament, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X