டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முடிவுக்கு வந்தது பாஜக- சிவசேனா கூட்டணி.. மத்திய அமைச்சரவையிலிருந்து அரவிந்த் சாவந்த் விலகல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் விலகல்

    டெல்லி: சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் மோடி அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார். இதனால் பாஜக- சிவசேனா கூட்டணி முறிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

    மகாராஷ்டிரத்தில் 105 இடங்களுடன் முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பாஜக திடீரென ஆட்சி அமைக்கவில்லை என கூறிவிட்டது. இதையடுத்து 2-ஆவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைத்துள்ளார்.

    அக்கட்சி ஆட்சி அமைக்க இன்று கெடு விதிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவைப்படும் நிலையில் வெறும் 56 இடங்களை பெற்றுள்ள சிவசேனா, தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இதனால் காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது.

     எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்! எங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்!

    பாஜக ஆட்சி

    பாஜக ஆட்சி

    ஏற்கெனவே நாடிய நிலையில் இரு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி அமைக்க இயலாது என அறிவித்துவிட்ட நிலையில் தற்போது என்சிபி கட்சி சிவசேனாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    மத்திய அமைச்சர்

    மத்திய அமைச்சர்

    அதில் மோடி அமைச்சரவையிலிருந்து சிவசேனா வெளியே வந்தால் ஆதரவு தருவோம் என கூறியுள்ளது. இந்த நிலையில் சிவசேனாவை சேர்ந்த எம்பி அரவிந்த் சாவந்த். இவர் மத்திய அமைச்சரவையில் கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சராக உள்ளார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    சட்டசபை தேர்தலுக்கு முன்னர் சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காக்க பாஜக தவறிவிட்டதாக கூறி இன்று காலை அமைச்சரவையிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பே அமைச்சரவையில் இடம் ஆட்சியில் பங்கு ஆகியவற்றை முன்னிறுத்தியே பாஜகவும் சிவசேனாவும் பேச்சுவார்த்தை நடத்தியது.

    உண்மை உள்ள கட்சி சிவசேனா

    உண்மை உள்ள கட்சி சிவசேனா

    இரு கட்சிகளும் இதை ஏற்றுக் கொண்டன. ஆனால் தற்போது அதை பாஜக மறுத்துள்ளது. சிவசேனாவின் பக்கம் உண்மை உள்ளது. ஆனால் பாஜகவோ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இது போன்ற பொய்யான சூழலில் டெல்லியில் அமைச்சரவையில் இருக்க வேண்டிய அவசியம் ஏன். அதனால்தான் நான் எனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன் என கூறியிருந்த நிலையில் சாவந்த் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் பாஜக-சிவசேனா கூட்டணி முறிவுக்கு வந்தது.

    English summary
    Shiv sena MP and Union Minister Arvind Sawant resigned from Modi cabinet accusing BJP is untrue to its promises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X