டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் இல்லை.. சஞ்சய் ராவத்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கு என எதுவும் இல்லை என சிவசேனா கட்சியின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

Shiv sena MP Sanjay Raut says nothing is there for Tamil hindus of Srilanka in CAB

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் எதிர்ப்பாக 80 பேரும் வாக்களித்தனர். இந்த மசோதா மீதான விவாதம் நேற்று இரவு வரை நடைபெற்றது.

இந்த சட்டத்திருத்தத்தின்படி மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தினரும் குடியுரிமை அளிக்க அனுமதி அளிக்க வகை செய்யும். இவர்கள் இந்தியாவுக்குள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குடிபெயர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக சிவசேனா கட்சியின் எம்பியும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறுகையில் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடக் கூடாது.

அது சரியானதல்ல. இந்து- முஸ்லிம் பிரிவினையை மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு ஒன்றுமில்லை என்றார் சஞ்சய் ராவத்.

English summary
Shivsena MP Sanjay Raut says that there is nothing in Citizenship Amendment Bill for Tamil Hindus of Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X