டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்கு அகதிகளுக்காக ஒரு சட்டம்.. பேசாம பாகிஸ்தானையே அழித்துவிடலாம்.. ராஜ்யசபாவை அதிர வைத்த எம்.பி.!

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizen Amendement Bill | Amit Shah's speech in Rajya sabha

    டெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என மத்திய அரசு கூறுகிறது. இதையே காரணமாக வைத்து பாகிஸ்தானை ஒரேயடியாக ஒழித்துக் கட்டி விடலாமே என்று ராஜ்யசபாவில் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

    குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் இன்று நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடைக்கலம் தேடி இந்தியா வரக்கூடிய அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள்.. அமித் ஷாவை பார்த்து பொங்கிய ப.சி.. பொளேர் பேச்சு இப்படி அநீதி இழைக்கவா உங்களை தேர்வு செய்தார்கள்.. அமித் ஷாவை பார்த்து பொங்கிய ப.சி.. பொளேர் பேச்சு

    பாகிஸ்தான் இந்துக்கள்

    பாகிஸ்தான் இந்துக்கள்

    பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இந்துக்களின் எண்ணிக்கை என்பது, கிடுகிடுவென குறைந்து வருவதாக, இந்த சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார்.

    சஞ்சய் ராவத்

    சஞ்சய் ராவத்

    இந்த நிலையில்தான், சஞ்சய் ராவத், தனது உரையின்போது ஆவேசமாக காணப்பட்டார். அவர் கூறுகையில், இது பாகிஸ்தான் நாட்டின் சட்டசபை கிடையாது. இந்த நாட்டின் மக்களுக்காக நாம் ஓட்டு போட்டு உள்ளோம். பாகிஸ்தான் நடவடிக்கை சரியில்லை என்று தெரிந்தால், நமது வலிமையான மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டை வேரோடு அழித்து விட வேண்டியதுதானே.

    வலிமை

    வலிமை

    பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இருவருமே மிகவும் வலிமையான நபர்கள். எனவே பாகிஸ்தானை ஒரேடியாக அழித்து விடுவதற்கு இதுதான் நல்ல நேரம். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நலன் பறிக்கப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். இதையே காரணமாக வைத்து, பாகிஸ்தானை ஒட்டு மொத்தமாக அழித்து விடுங்கள்.

    ஹெட்மாஸ்டர்

    ஹெட்மாஸ்டர்

    அகதிகளாக இந்தியா வரக்கூடியவர்களுக்கு வருங்காலத்தில் வாக்குரிமை வழங்கப்படுமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அமித் ஷா படித்த பள்ளியில் நாங்கள் தலைமையாசிரியர் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    Shiv Sena MP Sanjay Raut says why don't we finish Pakistan? as you say minorities' rights have been violated in Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X