டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரியங்காவும், ராகுலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. போனா போகுது.. சிவசேனா திடீர் பாராட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க. வேண்டுமானால் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து விட்டு போகட்டும் என சிவசேனா கட்சியின் தலையங்கத்தில் கிண்டல் செய்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு கட்சிகளுக்குள்ளும் எத்தனை முட்டல் மோதல்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் ஆதரவை சிவசேனை வாபஸ் பெற்றுவிட்டது.

இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் மீண்டும் சிவசேனா அங்கம் வகிக்கிறது. 542 மக்களவை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலுக்கு நேற்று முன் தினம் எக்சிட் போல் வெளியானது.

இவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன? இவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன?

சாம்னா

சாம்னா

இந்த தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாம்னாவில் தலையங்கப் பக்கத்தில் கூறுகையில் மோடி அரசுதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்வதற்கு எந்தவித அரசியல் வல்லுநர்களும் தேவையில்லை.

மக்கள் விருப்பம்

மக்கள் விருப்பம்

கள நிலவரத்தை பார்த்தோமேயானால் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள். மோடி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாக எக்சிட் போல் வெளியிட வேண்டிய தேவை ஒன்றும் இல்லை.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர், திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பாஜக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மோடியே மீண்டும் பிரதமராக வருவார். மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனாவும் சேர்ந்து வரலாற்று சாதனை படைக்கும்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

கடந்த 2014-ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அவர் எதிர்க்கட்சியாக நீடித்தார். ஆனால் இந்த முறை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களின் உழைப்புக்கும் பலனி கிடைக்க வேண்டும் இல்லையா? அதனால் அவர்கள் வேண்டுமானால் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்துவிட்டு போகட்டும் என அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Shiva Sena's mouthpiece praises Priyanka Gandhi and Rahul that as they had worked hard. they will become stron opposition party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X