டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க.. இது அவரு.. மாட்டுக்கறியையும் சேத்து விடுங்க.. இது இவங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    முட்டை, சிக்கனை வெஜிடேரியனாக அறிவியுங்க-மத்திய அமைச்சரின் கோரிக்கை

    டெல்லி: சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவு பட்டியலில் சேர்த்துவிடுமாறு சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு எம்பிக்களும் ஒவ்வொரு வகையான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அந்த வகையில் தமிழக எம்பிக்கள் அமளி துமளியில் ஈடுபட்டு தபால் தேர்வையே ரத்து செய்ய வைத்துவிட்டனர்.

    ஆனால் சிவசேனை கட்சியின் ராஜ்யசபா எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ரவுத் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று முன் தினம் ஆயுஷ் அமைச்சகத்தின திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.

    ஆயுர்வேத சிக்கன்

    ஆயுர்வேத சிக்கன்

    அப்போது சஞ்சய் ரவுத் பேசிய போது சிக்கன் மற்றும் கோழி முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில் நந்தர்பார் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்ற போது அங்குள்ள பழங்குடியினர் எனக்கு உணவளித்தனர். அது ஆயுர்வேத சிக்கன் என கூறினர்.

    இணையத்தில் வைரல்

    இணையத்தில் வைரல்

    உடல் உபாதைகளுக்கு தீர்வு அளிக்கும் என்றும் கூறினர். எனவே
    ஆயுர்வேத உணவுகளை கோழிக்கு கொடுத்தால் அது ஆயுர்வேத முட்டையை கொடுக்கும். எனவே முட்டை, சிக்கன் ஆகியவற்றை வெஜிடேரியன் உணவில் சேர்த்து விடுங்கள் என கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இவரது பேச்சு இணையத்தில் வைரலானது. நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ஆட்டுக் கறி

    ஏன் சிக்கன் மற்றும் முட்டையை மட்டும் வெஜிடேரியன் லிஸ்ட்ல சேர்க்கறீங். அப்படியே மட்டன், பீஃப்பையும் சேர்த்துடலாமே. குதிரை கறியையும் சேர்த்துவிடுங்கள். பழங்காலத்தில் அஸ்வமேத யாகம் செய்த போது இவையெல்லாம் செடிகள், கொட்டைகளை மட்டுமே உண்டன என்பதால் இவை வெஜிடேரியன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பழங்காலத்தில் இவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

    வெள்ளப்பூண்டு

    இந்த புதிய வெஜிடேரியன் உணவுகளை சமைக்க வெங்காயம் மற்றும் பூண்டை பயன்படுத்தலாமா.

    English summary
    Shivsena MP Sanjay Raut demands Chicken and Eggs be called as Vegatarian.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X