டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை மசோதா..ராஜ்யசபாவில் வாக்கெடுப்பில் பங்கேற்காத சிவசேனா.. செமகடுப்பில் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | What is it

    டெல்லி: குடியுரிமை மசோதாவை ராஜ்யசபாவில் எதிர்த்து வாக்களிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காத சிவசேனா மீது காங்கிரஸ் மேலிடம் கடுமையாக அதிருப்தியில் இருக்கிறதாம். அதேநேரத்தில் பாஜக தலைவர்களோ மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு முதல் அக்னி பரீட்சையாக இருந்தது மத்திய அரசின் குடியுரிமை மசோதா. என்சிபியும் காங்கிரஸும் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

    ஆனால் தேசத்தின் நலன் கருத்தி இம்மசோதாவை ஆதரிப்போம் என சிவசேனா அறிவித்தது. அதேபோல் லோக்சபாவில் குடியுரிமை மசோதாவை சிவசேனா ஆதரித்தது.

    பற்றி எரியும் 7 சகோதரிகள்.. குவிக்கப்பட்ட ராணுவம்.. போராடும் மக்கள்.. இன்னொரு காஷ்மீராகும் வடகிழக்குபற்றி எரியும் 7 சகோதரிகள்.. குவிக்கப்பட்ட ராணுவம்.. போராடும் மக்கள்.. இன்னொரு காஷ்மீராகும் வடகிழக்கு

    அப்செட்டான ராகுல்

    அப்செட்டான ராகுல்

    இதனால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனை தமது ட்விட்டர் பதிவின் மூலம் மறைமுகமாக சுட்டிக்காட்டினார் ராகுல் காந்தி. இதனால் மகாராஷ்டிரா கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டது.

    சிவசேனா பல்டி

    சிவசேனா பல்டி

    இதனையடுத்து எங்கள் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காமல் போனால் ராஜ்யசபாவில் மசோதாவை ஆதரிக்கமாட்டோம் என உத்தவ் தாக்கரே அறிவிக்க நேர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவு ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

    ராஜ்யசபாவில் இன்னொரு பல்டி

    ராஜ்யசபாவில் இன்னொரு பல்டி

    அப்போது மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசிய சிவசேனா, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இது பாஜவுக்கு மறைமுகமான ஆதரவு என்பதை அனைவரும் அறிவர். பின்னர் அதிமுக ஆதரவுடன் ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.

    சோனியாவின் தலையீடு

    சோனியாவின் தலையீடு

    இந்த வாக்கெடுப்புக்கு முன்னரே தெளிவான நிலையை எடுக்குமாறு சிவசேனாவுக்கு தூதர்களை அனுப்பி வைத்தது காங்கிரஸ். ஆனால் சிவசேனாவோ குழப்பமான பதிலைத் தந்தது. ஒரு கட்டத்தில் சோனியா காந்தியும் இவ்விவகாரத்தில் தலையிட்டுப் பார்த்தார். ஆனால் சிவசேனா பிடி கொடுக்கவில்லை.

    பாஜக மகிழ்ச்சி

    பாஜக மகிழ்ச்சி

    இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள், சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்; மீண்டும் பாஜக கூட்டணிக்கு சிவசேனா வர வேண்டும் எனவும் அழைப்பும் விடுத்துள்ளனர்.

    English summary
    According to the sources, Congress High command appoints over the Shiv Sena' Skips vote against CAB in Rajyasabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X