டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மாதங்களில் விற்பனையான தேர்தல் பத்திரங்களின் மதிப்பு என்ன.? வெளியான அதிர்ச்சி தகவல்..

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் சுமார் ரூ.3.622 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை உள்ளிட்ட பண பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வசதியாக எஸ்பிஐ வாயிலாக, தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய குடிமகன் அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகியோரால் மட்டுமே இந்த பத்திரங்களை வாங்க இயலும்.

Shocking information appeared by RTI.. Rs.3.622 crore worth Electrol bonds sold in 2 months

புனேவை சேர்ந்த விகார் துருவ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி எவ்வளவு தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது என்ற தகவலை அளிக்க கோரினார்.

அவரது இந்தமனுவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரூ.3,622 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது

இதில் கடந்த மார்ச் மாதம் ரூ. 1,365.69 கோடிக்கும், ஏப்ரலில் ரூ. 2,256.37 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் போது அதிக அளவாக ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ரூ. 694 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பதவி விலக மோடிக்கு உத்தரவிட்ட வாஜ்பாய்.. உள்ளே புகுந்து காப்பாற்றிய அத்வானி.. யஷ்வந்த் சின்ஹா தகவல் பதவி விலக மோடிக்கு உத்தரவிட்ட வாஜ்பாய்.. உள்ளே புகுந்து காப்பாற்றிய அத்வானி.. யஷ்வந்த் சின்ஹா தகவல்

கொல்கத்தாவில் ரூ.417.31 கோடிக்கும், டெல்லியில் ரூ. 408.62 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் ரூ.3.622 கோடிக்கு நன்கொடை பத்திரங்கள் வாங்கி, கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டதில் இருந்து பாஜ.வுக்கு தான் அதிகளவில் பத்திரங்கள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கு தான் இந்த பத்திரங்களை ஒருவர் வாங்க முடியும். ஆனால் ஒருவரே எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி, தான் விரும்பும் கட்சிக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

English summary
In the past two months, across the country Rs 3.622 crore worth Electrol bonds has sold
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X