டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்?

டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இதில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். லோக்சபா தேர்தல் நேற்று முதல்நாள் நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, நேற்று முதல்நாள் மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிவிற்கு வந்து இருக்கிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. நேற்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வரவேற்பு.. கூட்டணி கட்சிகளுடன் மீட்டிங் நடத்திய மோடி.. கவனம் பெற்ற இபிஎஸ், ஓபிஎஸ், பிரேமலதா! சிறப்பு வரவேற்பு.. கூட்டணி கட்சிகளுடன் மீட்டிங் நடத்திய மோடி.. கவனம் பெற்ற இபிஎஸ், ஓபிஎஸ், பிரேமலதா!

ஆலோசனை நடக்கிறது

ஆலோசனை நடக்கிறது

இதையடுத்து லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்குகிறார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது.

கூட்டணி குறித்து ஆலோசனை

கூட்டணி குறித்து ஆலோசனை

பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த பின், எப்படி கூட்டணி அமைப்பது, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

40 இடங்கள்

40 இடங்கள்

பாஜகவின் தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 40 இடங்கள் தேவைப்படும் என்று இதில் அமித் ஷா பேசி இருக்கிறார். ஆட்சி அமைக்க 40 இடங்கள் குறைவாக இருக்கும். இதனால் அதிக இடங்கள் வென்ற மாநில கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்று இந்த ஆலோசனையில் பேசி இருக்கிறார்கள். இதற்காக தென் மாநில கட்சிகள் மீது கவனத்தை செலுத்தி உள்ளனர்.

எத்தனை கட்சிகள்

எத்தனை கட்சிகள்

மொத்தம் 5 கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு செய்துள்ளது. பிஜு ஜனதா தளம், மத சார்பற்ற ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய நான்கு கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வட மாநில கட்சியும் உள்ளே இழுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இவர்கள் ஆதரவு அளித்தால் மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்று பாஜக பிளான் போட்டுள்ளது.

English summary
Should bring 5 state parties to the alliance asks PM Modi in the meeting with NDA allies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X