டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓடும் வாகனத்தில்.. கார் கண்ணாடியில் அமர்ந்து.. இரும்பு தூணில்.. இதெல்லாம் செல்பி எடுக்கும் இடங்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓடும் வாகனத்தில்.. கார் கண்ணாடியில் அமர்ந்து... இதெல்லாம் செல்பி எடுக்கும் இடங்களா?- வீடியோ

    டெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் செல்பி எடுக்கும் மையமாக மாறிவிட்டது. அதுவும் இந்த பாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் செல்பி எடுப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் அதன் குறுக்கே ஒரு பாலம் கட்டுவதற்கு 1997-ஆம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து சுமார் 14 ஆண்டுகளாக இந்த பாலம் கட்டப்படும் பணிகள் நடந்து முடிந்தன.

    முகநூலின் லேசோ செயலி வந்துடுச்சுங்கோ... இதிலும் ஆடலாம், பாடலாம் வீடியோவா போடலாம்! முகநூலின் லேசோ செயலி வந்துடுச்சுங்கோ... இதிலும் ஆடலாம், பாடலாம் வீடியோவா போடலாம்!

    எத்தனை கோடியில்

    எத்தனை கோடியில்

    இந்த பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. சுமார் ரூ,1594 கோடியில் இந்த பாலம் கட்டப்பட்டது.

    செல்பி எடுக்கும் மையம்

    செல்பி எடுக்கும் மையம்

    இந்த பாலத்தில் உள்ள பெட்டிகளில் இருந்து பார்த்தால் பறவையின் பார்வையில் எப்படி டெல்லி நகரம் தெரியுமோ அது போல் இருக்கும். கண்களை கவரும் வகையில் உள்ள இந்த பாலம் தற்போது செல்பி எடுக்கும் மையமாக மாறி விட்டது.

    விபரீதம்

    ஆபத்தை உணராமல் பாலத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கின்றனர். அத்துடன் பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு தூண்கள் மீதும் ஏறி செல்பி எடுப்பதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இன்னும் சிலரோ வாகனங்களை ஓட்டியபடியும் கார்களின் கண்ணாடிகளில் ஏறி அமர்ந்தபடியும் செல்பி எடுப்பதையும் காண முடிகிறது. பாலத்தை பராமரிக்கும் துறை இந்த செல்பி மோகம் குறித்து கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    English summary
    On the newly-opened Signature Bridge in the national capital, enthusiastic tourists were seen standing on suspension bridges to click selfies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X