டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஸ்ஸாம் விமானம் விபத்தில் ஒற்றுமை..10 வருடத்துக்கு முன்பு... அதே இடம்.. அதே 13பேர்.. அதே மாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: அஸ்ஸாமின் ஹோர்காட் விமானப்படை தளத்தில் ஐஏஎப் ஏஎன்-32 என்ற போக்குவரத்து பயன்பாட்டு விமானம் நேற்று மாலை 13 பேருடன் மாயமானது. இந்நிலையில் இதேபோல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே ஏஎன்-32 விமானம், இதேபோல் 13 பேருடன் இதே இடத்தில் பயணித்த போதுதான் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

அ்ஸ்ஸாம் மாநிலம் ஹோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஐஏஎப் ஏஎன்-32 என்ற போக்குவரத்து பயன்பாட்டு விமானம் நேற்ற மதியம் 12.25மணிக்கு புறப்பட்டு சென்றது. 13 விமானப் பணியாளர்களும், 5 பயணிகளும் இந்த விமானத்தில் இருந்தனர். விமானம் அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் உள்ளமெசுகாவில் உள்ள ராணுவதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

since june 2009, AN-32 crashed in same location with same number of people at assam

இந்த விமானம் மெசுகாவை அடைய 50 நிமிடங்கள் ஆகும் என்ற நிலையில், விமானம் புறப்பட்ட 35 நிமிடத்தில்,அதாவது மதியம் 1 மணி அளவில் ரேடார் கண்காணிப்பில் இருந்தது மறைந்தது. அத்துடன் விமானக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பாக மாயமாகி உள்ளது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30. சி-130 ஆகிய ரக விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ராணுவம் மற்றும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களும் விமானத்தை தேடி வருகின்றனர்.

இதனிடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019ம் ஆண்டு இதே ஜுன் மாதத்தில் இதேபோல் தான் மெசுகாவை நோக்கி, ஐஏஎப் ஏஎன்-32 என்ற போக்குவரத்து பயன்பாட்டு விமானம் பயணித்தது. அதிலும் இப்போது மாயமாகி உள்ள விமானத்தை போல் தான் 13 பேர் பயணித்தனர். இப்போது மாயமாகி உள்ள அதே இடத்தில் தான் விமானம் விபத்துக்குள்ளாகியது. எனவே இரு விபத்தும் ஒரே மாதிரி நடந்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
since june 2009, IAF AN-32 plane crashed in same location with same number of people at assam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X