டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேலும் 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்படும்.. விமானங்களின் பயண நேரத்தை குறைக்க நடவடிக்கை- நிர்மலா

Google Oneindia Tamil News

டெல்லி: மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் பங்களிப்போடு மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Recommended Video

    பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: விமான பயணங்களுக்கான எரிபொருள் செலவினங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே பயண நேரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி நேரத்தை குறைப்பது முக்கியம். நகரங்களை மிக விரைவில் சென்றடைவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய விமான வான் பரப்பை தாராளமாக பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டு கட்டுப்பாடு நீக்கப்படும். இதனால் விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக குறையும். விமான நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி மிச்சமாகும்.

    Six more airports will be auctioned for private participation: Nirmala Sitharaman

    மேலும், கூடுதலாக 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்படும். தனியார் பங்களிப்புடன் இவை செயல்படும். ஆக மொத்தம் 12 விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

    அரசின் முற்றுரிமை நீக்கம்.. நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு அரசின் முற்றுரிமை நீக்கம்.. நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    2300 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் 12 விமான நிலையங்களில் தனியார் மூலம், கூடுதல் முதலீடு சுமார் 13,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான பயணிகளுக்கு நல்ல சேவையை வழங்குவதற்கு இது அவசியம்.

    English summary
    Six more airports will be auctioned for private participation; Rs 13,000 cr additional investment by pvt players in 12 airports: FM
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X