டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ

Google Oneindia Tamil News

டெல்லி: கூட்டுறவுகளில் திறன் மேம்பாடு கூட்டுறவு சூழ்நிலையில் தொடக்க கூட்டுறவுகளுக்கான திறன் மேம்பாடு திட்டம் என்பது விவசாயிகளை மேம்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இது தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் ஒரு உன்னத திட்டமாகும்.

இத்திட்டத்தை தொடங்கி வைப்பதன் மூலம் கிராமப்புறங்களில் கூட்டுறவுகளில் இடம் பெற்றுள்ள விவசாய உறுப்பினர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை எளிதாக பெறமுடியும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

Skill Development in Cooperatives The Skills Development Program

மேலும், இத்திட்டத்தினை துவக்கிவைத்து அவர் பேசுகையில், கூட்டுறவுகளில் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் 18 மண்டல பயிற்சி மையங்கள் மூலம் இந்தியா முழுவதும் பயிற்சி வழங்கப்படும்; இந்த மண்டல பயிற்சி மையங்கள் கழகத்தால் உருவாக்கப்பட்ட லட்சுமண்ராவ் இனாம்தார் கூட்டுறவு ஆராயச்சி மற்றும் பயிற்சி மையத்தின் கிளைகளாக செயல்படும்.

மேலும் இந்த மண்டல பயிற்சி மையங்களுக்கான 45 கூட்டுறவு பயிற்சி வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தையும் தொடங்கி வைப்பதன் மூலம் தொடக்க வேளாண்மை சங்கங்களில் பாரத பிரதமரின் ~தற்சார்பு இந்தியா அழைப்பிற்கு ஏற்ப பணியாளர்கள், வேளாண் உறுப்பினர்களின் அறிவு திறன் மற்றும் நிறுவன மேம்பாட்டுக்கு பெரிதும் துணைபுரியும் என தெரிவித்தார்.

இது குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மேளாண்மை இயக்குநர் திரு சந்தீப் நாயக் பேசுகையில், லினாக் பயிற்சிமையம் 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டு இது வரை கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து 30,000 நபர்களுக்கு பயிற்சியினை வழங்கியுள்ளது. மேலும், இப்பயிற்சிமையம் 5000 விவசாயிகளுக்கு இந்நிதியாண்டில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த 45 பயிற்சி திட்டங்களும் சந்தை பொருளாதார சூழ்நிலையில் தொழில்முறை வணிகத்தை கூட்டுறவுகளில் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

மேலும், மத்திய வேளாண் அமைச்சரின் தொடக்க கூட்டுறவுகளில் புதுமையான பயிற்சி திட்டங்களை வகுத்து பயிற்சி அளித்திட தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தை வலியுறுத்தியுள்ளார்கள். தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமானது கூட்டுறவுகளை அதன் தத்துவத்தின் அடிப்படையில் திட்டமிடல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற பணிகளான உற்பத்தி, பதனிடுதல், சந்தைபடுத்துதல், சேமிப்பு, வேளாண் விளைப்பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, உணவுப் பொருட்கள், தொழிற்சாலை தயாரிப்புகள், கால்நடை, மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பு மற்றும் மருத்துவமனை, சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவக்கல்வி போன்ற சேவைகளை அளிக்க உதவி செய்வதாகும். தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தொடக்க, மாவட்ட, தலைமை மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதி உதவிகளை அளித்து வருகிறது. இக்கழகம் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்பட்டுவருகிறது எனத் தெரிவித்தார்.

நாளடைவில், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் கூட்டுறவுகளுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் சேவைகள் அளிக்கும் நிதி வலிமைமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தேசிய அளவில் கூட்டுறவு சங்கங்களுக்கு இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. இக்கழகம் சர்வதேச தர நிறுவனத்தால் ஐஎஸ்ஓ 9001:2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும்.

இக்கழகம் தேசிய அளவில் செயல்பட்டு வருவதால், சந்தையுடன் இணைந்து கூட்டுறவு வணிக சூழலை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. மாண்புமிகு பாரத பரதமரின் கனவு திட்டங்களான விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், எழுந்து நில் இந்தியா, திறன்மிக்க இந்தியா போன்றவற்றின் அடிப்படையில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், கூட்டுறவு - 22 திட்டம் மூலம் தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட 222 மாவட்டங்களில் கூட்டுறவினை வளர்ச்சியடைய செய்தல், தொடக்க கூட்டுறவுச் சங்கங்களை ஊக்கப்படுத்துதல், கூட்டுறவு தோழன் திட்டம் மூலம் பயிற்சி மாணவர்களுக்கு வாய்ப்பு, புது கூட்டுறவுறவுகள் மூலம் புதிய கூட்டுறவுகளுக்கான திட்டமிடுதல் மற்றும் கூட்டுறவுகள் மூலம் சுகாதாரத்தினை மேம்படுத்திட கூட்டுறவுகள் மூலம் சுகாதாரம் - திட்டம் போன்றவை துவக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. நிதி உதவி மற்றும் திட்ட யோசனைகள் மூலம் தேசிய அளவில் கூட்டுறவுகளை வழிநடத்திடும் இக்கழகம் கூட்டுறவு அமைப்புளுக்கு புதுமையான தீர்வுகள் அளிப்பதன் வாயிலாக அதன் செயல்பாட்டில் முன்னோடியாக உள்ளது.

பல்வேறு திட்டங்களின் தொடர்ச்சியாக மத்திய வேளாண் அமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவுகளுக்கென தனியே கோப் - யுடியுப் சேனலை துவக்கி (கூட்டுறவுகளில் இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு) வைத்தார்கள். பதிய கூட்டுறவுகளை உருவாக்குவதன் மூலம் கூட்டுறவு இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதுடன் புதுமையான திட்டங்களை செயல்படுத்த அது அடிப்படையாக அமைகிறது. தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் தமிழ் உட்பட 18 பிராந்திய மொழிகளில் வெளியிட்ட விளக்க வீடியோ அந்த மாநில கூட்டுறவுகளுக்கு வழிகாட்டியாக அமைகிறது. அதன் மூலம் மத்திய அரசின் 10000 வேளாண் உற்பத்தியாளர்கள் குழுக்களை உருவாக்குதல் திட்டம் நிறைவேற ஏதுவாகும்.

இன்றைய நிலையில் இந்தியாவில் 290 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட 8.50 லட்சம் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் 94 சதவீத விவசாயிகள் ஏதாவதொரு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவுகள் விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்களுக்கும் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு விவசாயிகளை சுரண்டும் வியாபாரிகளிடமிருந்து பாதுகாக்கிறது. எனவே தற்சார்பு இந்தியா திட்டத்தில் கூட்டுறவுகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. கடந்த பலமாதங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக பணியாளர்கள் பல்வேறு தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு நேரடியாக சென்று சங்கத்தின் நிர்வாகிகள், பணியாளர்களுடன் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் லினாக் பயிற்சிமையம் இந்த 45 பயிற்சி கையேடுகளை தயாரித்துள்ளது. கீழ்கண்ட வகையான சங்கங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

அ) தொடக்க கூட்டுறவுகள்

ஆ) வேளாண் உற்பத்தியாளர்கள் குழு - கூட்டுறவுகள்

இ) இணையமாக செயல்படும் சுயஉதவி குழுக்கள்

கீழ்கண்ட இனங்களில் பயிற்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அ) தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக திட்டங்கள்

ஆ) மத்திய அரசின் ~10000 வேளாண் உற்பத்தியாளர்கள் குழுக்கள் உருவாக்குதல்| திட்டம்

இ) மத்திய அரசின் ~வேளாண்; உட்கட்டமைப்பு நிதி| திட்டம்

ஈ) உணவு பதனிடுதல் தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் ~பாரத பிரதமரின் நுண்ணிய உணவு

பதனிடும் அலகுகள்| திட்டம்

உ) மத்திய அரசின் ~பால்வள உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நிதி திட்டம்

ஊ) மத்திய அரசின் ~மீன்வள உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி| திட்டம்

எ) மத்திய அரசின் ~பாரத பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்

ஏ) ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் திட்டங்கள்

ஐ) மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் திட்டங்கள்

ஒ) இதர நிறுவனங்களின் திட்டங்கள்.

துவங்கப்பட்ட 45 பயிற்சி திட்ட உள்ளடக்கங்கள் பின்வருமாறு:

வேளாண்மை ஒரு வணிக நிறுவன நடவடிக்கை, இளைஞர்கள் புதிய கூட்டுறவுகள் உருவாக்க ஊக்குவிப்பு திட்டம், கூட்டுறவு வணிக நிறுவனங்களில் வணிக திட்டத்தினை உருவாக்குதல், தொடக்க நிலை கூட்டுறவுகளில் வியாபார வளர்ச்சி மற்றும் சொத்துக்கள் மேலாண்மை, கணக்கியல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், வேளாண் உற்பத்தி பதனிடும் வணிகம், உடனடியாக நுகரும் உணவுகள் பதனிடும் வணிகம், கூட்டுறவுகளில் உணவு பாதுகாப்பு முறை, சேமிப்பு கிடங்குகள் பயன்பாடு, குளிரூட்டப்பட்ட கிடங்குகள் பயன்பாடு, நன்னீர் பிராணிகள் வளர்ப்பு வணிகம், வண்ண மீன்கள் வளர்ப்பு வணிகம், கடல்பாசி வணிகம், வாத்து பண்ணை வியாபாரம், தேன் பதனிடுதல் வியாபாரம், உணவு வாசனைப் பொருட்கள் பதனிடுதல், தேங்காய் பதனிடும் வியாபாரம் மற்றும் வாடகை மூலம் சேவைகளை பயன்படுத்துதலில் மேலாண்மை முதலியன.

இத்திட்டம் குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக மண்டல இயக்குநர், சென்னை வி.எம். சந்திரசேகரன், இப்பயிற்சி திட்டம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படும் தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களும், உறுப்பினர்களும் பெரிதும் பயன் பெறுவர் என தெரிவித்தார்.

English summary
Skill Development in Cooperatives The Skills Development Program for start-up cooperatives in a co-operative environment is one of the various initiatives initiated with the objective of improving farmers. This is a noble project of the National Cooperative Development Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X