டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கயோ மச்சம் இருக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் சூழ்நிலை.. டெல்லி அரசியலில் திருப்பம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் சூழ்நிலை.. டெல்லி அரசியலில் திருப்பம்!

    டெல்லி: டெல்லியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகவும் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சி அமைக்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இந்தியா முழுக்க பாஜக தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளது. அதிலும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    முக்கியமாக காங்கிரஸ் மொத்தமாக நாடு முழுக்க முடங்கிவிட்டது. திமுக மட்டுமே பாஜகவிற்கு எதிராக கொஞ்சம் வலுவான கட்சியாக தற்போது வளர்ந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று முதல் 'டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி'.. பட்டம் வழங்குகிறது டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்இன்று முதல் 'டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி'.. பட்டம் வழங்குகிறது டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்

    டெல்லி எப்படி

    டெல்லி எப்படி

    இந்த நிலையில்தான் டெல்லியில் வரும் ஜனவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 2015 சட்டசபை தேர்தல் அதிரடிக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. முதலில் கூட்டணி அமைத்து ஆட்சி, பின் தனியாக ஆட்சி, என்று இரண்டு தேர்தலை அடுத்தடுத்து சந்தித்த ஆம் ஆத்மி தற்போது மூன்றாவது முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கொஞ்சம் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்று கூறலாம். அங்கு காங்கிரஸ் கட்சிக்கு சரியான முகம் கிடையாது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த ஷீலா தீட்சித் சமீபத்தில் இயற்கை எய்தினார். தற்போது டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு என்று வலிமையான தலைவர் யாருமே இல்லை.

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    பாஜகவும் ஏனோ டெல்லி மீது பெரிய ஆர்வம் காட்டவில்லை. டெல்லியின் முகமாக பாஜக யாரையும் இப்போது முன்னிறுத்தவில்லை. ஒரு காலத்தில் பாஜக டெல்லியின் முகமாக கிரண் பேடியை முன்னிறுத்தியது. ஆனால் தற்போது பாஜகவிற்கு அப்படி யாரும் இல்லை. 2 மாதத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் இன்னும் பாஜக அப்படி ஒரு முகத்தை கண்டுபிடிக்கவில்லை.

    ஆர்வம் இல்லை

    ஆர்வம் இல்லை

    டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு பெரிதாக பாஜக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். அங்கு யார் ஆட்சி அமைத்தாலும், துணை நிலை ஆளுநரை வைத்து பாஜக வேலைகளை பார்த்துக்கொள்ளும். தேர்தலில் நின்றுதான் வெல்ல வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று பாஜக கருதுவதாக தெரிகிறது.

    அமித் ஷா

    அமித் ஷா

    அதேபோல் பாஜகவில் மிகப்பெரிய தலைமை மாற்ற டிசம்பரில் நடக்க உள்ளது. பாஜகவின் புதிய தேசிய தலைவர் டிசம்பரில் நியமிக்கப்பட உள்ளார். அவரின் தலைமைக்கு கீழ்தான் பாஜக டெல்லி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதனால் டெல்லி மீது அமித் ஷா பெரிதாக கவனம் கொள்ளவில்லை என்கிறார்கள் .

    ஆம் ஆத்மி எப்படி

    ஆம் ஆத்மி எப்படி

    இதுதான் தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளது. பாஜகவின் ஆர்வமின்மை, காங்கிரசின் தலைமையின்மை இரண்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை டெல்லியில் கொடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் சரியாக பிரச்சாரம் செய்தால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி

    அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி

    2017 டெல்லி மாநகராட்சி தேர்தல் மற்றும் கடந்த லோக்சபா தேர்தல் இரண்டிலும் பெற்ற தோல்வி அரவிந்த் கெஜ்ரிவாலை சுதாரிக்க வைத்துள்ளது. அவரும் பாஜகவுடன் கொஞ்சம் மெல்லிய உறவை பேணி வருகிறார். இது அவருக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள். பாஜகவுடன் அவர் கூட்டணி வைத்தால் கூட சந்தேகம் இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Sleeping Congress, Not Interested BJP may help Arvind Kejriwal in Delhi Polls Next year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X