டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை

Google Oneindia Tamil News

Recommended Video

    Raghuram Rajan | எந்த துறைகளில் மோசமான பாதிப்பு?.. ராகுராம் ராஜன் விளக்கம்- வீடியோ

    டெல்லி: 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட இந்தியாவில் விற்பனை ஆகவில்லை என் பிரிட்டானியா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை இந்தியாவில் கவலை அளிக்கும் வகையில் மாறிக்கொண்டிருப்பதாக கருத்துக்கள் வலுத்து வருகிறது.

    கடந்த சில மாதங்கள் முன்பு வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. எல்லாருமே தேடிதேடி வாங்கி செலவழித்துக் கொண்டிருந்தார்கள்.

    ஆடம்பரான செலவுகளும் தாரளமான இருந்தது. ஆனால் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. கடந்த சில மாதங்களில் அப்படியே தலைகீழாய் மாறியுள்ளது.

    பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன் பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்

    பிரிட்டானியா கவலை

    பிரிட்டானியா கவலை

    சில்லறை விற்பனை நாளுக்கு நாள் சரிய தொடங்கியது. 5 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் கூட விற்பனை ஆகவில்லை என் பிரிட்டானியா நிறுவனம் பொருளாதார மந்த நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

    துணிகள் தேங்குவதாக தகவல்

    துணிகள் தேங்குவதாக தகவல்

    பொதுமக்கள் வாங்குவதை குறைத்துக்கொள்ள ஆரம்பித்ததால் டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிதுறையும் பாதிக்ப்பட்டுள்ளது. விதவிதமான நவீனபேஷனில் துணிகளை இறக்கிய ஜவுளி அதிபர்கள் துணிகள் விற்பனை ஆகாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

    பாதிப்பை ஏற்படுத்தும்

    பாதிப்பை ஏற்படுத்தும்

    நாடு முழுவதும் 30 நகரங்களில் 12லட்சத்து 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் தேங்கிகிடக்கிறது என்று ரியல் எஸ்டேட் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை விற்பனை செய்ய இன்றும் குறைந்தது 3.5 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். பிரதமர் மோடியின் வீடுகளுக்கு மானியம் அளிக்கும் திட்டம், குறைந்த ஜிஎஸ்டி போன்றவை ஓரளவு கைகொடுத்தாலும் என்பிஎப்சி எனப்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் பண புழக்கம் குறைவாக இருப்பதால் எந்த நேரம் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கடும் சவால்

    கடும் சவால்

    ரியஸ் எஸ்டேட் துறையில் நிலவும் பாதிப்பு இரும்பு விற்பனையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. , டாடா ஸ்டீல் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் சுமார் ரூ .100 லட்சம் கோடி உள்கட்டமைப்பு முதலீடுகளை வைக்க வேண்டிய சவால்களை சந்தித்து வருகின்றன. இரும்பின்தேவை இந்த ஆண்டு 7 முதல் 7.5 சதவீதம் இந்த ஆண்டு வளர வேண்டும் என எதிர்பார்பபதாக ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீலின் இணை எம்.டி. சேஷகிரி ராவ் கூறினார்.

    வேலை பறிபோகும்

    வேலை பறிபோகும்

    இதேபோல் ஆட்டோ மொபைல்துறையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் பேர் வேலைஇழக்கும் அபாயத்தில் உள்ளன. வாகனங்கள் விற்பனை மந்தம் காரணமாக உற்பத்தி குறைந்த வேலையும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

    ரிலையன்ஸ் கடும் போட்டி

    ரிலையன்ஸ் கடும் போட்டி

    மற்றொரு முக்கிய துறையான தொலைத்தொடர்பு துறையிலும் கடன்சுமை அதிகரிப்பால் வங்கிளுக்கு வாராக்கடன் லிஸ்டின் செல்லக்கூடிய விழிப்பு நிலையில் இருக்கிறார்கள். ரிலையன்ஸ் ஜியோவின் கடுமையான போட்டியை எதிர்க்கொள்ள முடியாமல் மற்ற நிறுவனங்கள் பெரிய சரிவை சந்துள்ளனர். இதன் விளைவுகள் ஆகஸ்ட் 30ம் தேதி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளிடயப்போகும் நிதிநிலை அறிக்கையை பொறுத்து உள்ளது.

    5 ஆண்டுகளில் இல்லாத சரிவு

    5 ஆண்டுகளில் இல்லாத சரிவு

    இதனால் ஆகஸ்ட் 30ம் தேதி மத்திய புள்ளியில் துறை வெளியிட உள்ள பொருளதாரம் குறித்த புள்ளி விவரம் நிச்சயம் பலருக்கும் கவலை அளிக்கும். ஏனெனில் ஜூனில் வந்த புள்ளி விவரத்தைவிட ஜிடிபி விவரம் 5.8ல் இருந்து 5.4-5.6 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத ஒரு அளவாகும்.

    பணக்கொள்கை

    பணக்கொள்கை

    தற்போதைய இந்த சூழலுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதன் இறுக்கமான பணகொள்கையும் காரணம் என பலரும் விமர்சிக்கிறார்கள். இதேபோல் சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்த போர், உலகலாவிய பொருளதார மந்த நிலை, கச்சா எண்ணெய் விலை, நாணயங்கள் மதிப்பு சரிவு போன்றவையும் காரணமாக சொல்லப்படுகிறது.

    English summary
    even Rs 5 biscuit packs aren't selling , worrying slow down economy on india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X