டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசிங்கப்படுத்திவிட்டார்.. ராகுலை கண்டித்த ஸ்மிரிதி இராணி.. கொதித்து போய் சப்போர்ட் செய்த கனிமொழி!

இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்புணர்வு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பாஜக பெண் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்புணர்வு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பாஜக பெண் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசி அவையின் கவனத்தை திருப்பினார்.

கடந்த செவ்வாய் கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் குறித்து பேசினார். அதில், நரேந்திர மோடி மேக் இன் இந்தியா கொண்டு வந்தார். ஆனால் இப்போதெல்லாம் இந்த நாட்டில் ரேப் இன் இந்தியாதான் நடக்கிறது.

உத்தர பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒரு பெண்ணை வன்புணர்வு செய்கிறார். பின்னர் அந்த பெண் கொலையும் செய்யப்படுகிறார். ஆனால் இதை எல்லாம் பற்றி மோடி ஒரு வார்த்தை கூட பேசுவது கிடையாது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பெண் எம்பிக்கள்

பெண் எம்பிக்கள்

கடந்த செவ்வாய் கிழமை பேசப்பட்ட இந்த விஷயத்தை பாஜக பெண் எம்பிக்கள் இன்று லோக்சபாவில் எழுப்பினார்கள். இன்று பெரும்பாலும் அசாம் போராட்டம் குறித்து குடியுரிமை சட்ட திருத்தத்தின் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அதை திசை திருப்பும் வகையில் ஸ்மிரிதி ராணி உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் இந்த பிரச்னையை எழுப்பினார்கள்.

ஸ்மிரிதி இராணி

ஸ்மிரிதி இராணி

ஸ்மிரிதி இராணி தனது பேச்சில், ராகுல் காந்தி இந்தியாவில் பெண்களை வன்புணர்வு செய்யுங்கள் என்று அழைக்கிறார். நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் இப்படி பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்திய பெண்களை வந்து வன்புணர்வு செய்யுங்கள் என்று அழைக்கிறார், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று ஸ்மிரிதி இராணி குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அதேபோல் பாஜகவின் இன்னொரு பெண் எம்பி லோகேட் சட்டர்ஜீர், ராகுல் காந்தி பெண்களை அவமானப்படுத்திவிட்டார். அவர் மேக் இன் இந்தியா திட்டத்தையும் அவமானப்படுத்திவிட்டார். அவரை இந்த அவை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கனிமொழி பதில்

கனிமொழி பதில்

இதை பார்த்ததும் கொதித்தெழுந்த திமுக எம்பி கனிமொழி, ராகுல் காந்தி பேசியதை திரித்து பேச வேண்டாம். ராகுல் காந்தி கூறியதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் தினமும் எத்தனை பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள். இது பாஜகவின் பெண் எம்பிக்களுக்கு தெரியாது.

என்ன அவமானம்

என்ன அவமானம்

என்ன ஒரு அவமானம் இது. இந்தியாவில் மேக் இன் இந்தியா எங்கு இருக்கிறது. தினமும் பெண்கள்தான் ரேப் செய்யப்படுகிறார்கள். உங்களின் நரேந்திர மோடி அதை என்றாவது கேள்வி எழுப்பி இருக்கிறாரா என்று கனிமொழி மிகவும் ஆவேசமாக பேசினார். இதனால் அவையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
Smiriti Irani shouts at Rahul Gandhi for Rape in India remark: Kanimozhi hits back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X