டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல் காந்தியை எதிர்த்து 2வது முறையாக களம் காணும் ஸ்மிருதி இரானி.. அனல் பறக்கும் அமேதி

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Candidates List: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்குகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

    2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வட இந்தியா முழுக்க, மோடி அலை வீசியது. அதிலும், உத்தரபிரதேசத்தில் மோடி பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தார்.

    அந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டியது பாஜக. இதற்காகவே, ஸ்மிருதி இரானியை, அமேதியில், ராகுல் காந்திக்கு எதிராக களமிறக்கினர்.

    பிரபலமான இரானி

    பிரபலமான இரானி

    சின்னத்திரையில் வெகு பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்மிருதி இரானி. எனவே, பெண்களிடம் 'ரீச்' இருக்கும்.. பாரம்பரியமான காங்கிரஸ் தொகுதி அமேதியை கைப்பற்ற, அது வழிவகுக்கும் என்பது பாஜக தலைமை திட்டமாக இருந்தது. எனவே இரானிக்கு ஆதரவாக அமேதியில் தீவிர பிரச்சாரம் செய்தார் மோடி. மோடி அலைக்கு மத்தியில், இரானியின் புகழுக்கு நடுவேயும், ராகுல் காந்தி, 1.07 லட்சம், வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மத்திய அமைச்சர்

    மத்திய அமைச்சர்

    இருப்பினும், ராகுல் காந்தி வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் ஒப்பீட்டளவில் குறைவாகும். இதை கருத்தில் வைத்து, மத்திய அமைச்சர் பதவியை ஸ்மிருதி இரானிக்கு வழங்கி அழகு பார்த்தார் பிரதமர் மோடி. தோல்விக்கு பிறகும், அமேதி தொகுதியில் முகாமிட தொடங்கினார் ஸ்மிருதி இரானி. கடந்த 5 ஆண்டுகளில், பல முறை அமேதி தொகுதிக்கு அவர் விசிட் செய்துள்ளார். ராகுல் காந்தி இந்த தொகுதியை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதாக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

    ராகுல் காந்திக்கு எதிராக

    ராகுல் காந்திக்கு எதிராக

    இந்த நிலையில்தான், மீண்டும் அமேதியில் ஸ்மிருதி களமிறக்கப்பட்டுள்ளார். இன்று பாஜக வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. இம்முறை ராகுல் காந்தியை அவர் வீழ்த்துவதில் உறுதியாக உள்ளார். எனவே ராகுல் காந்தி, அமேதியோடு சேர்த்து 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன

    சாதகமா?

    சாதகமா?

    அதேநேரம், மோடி அலை வீசிய கடந்த தேர்தலில் கூட ஸ்மிருதி இரானியை வீழ்த்திய ராகுல் காந்தியால், காங்கிரஸ் தலைவர் என்ற ப்ரமோஷனுடன், இரானியை வீழ்த்துவது கஷ்டமானதாக இருக்காது என்று சொல்லும் அரசியல் பார்வையாளர்களும் உள்ளனர். எது எப்படியோ, அனல் பறக்கும் போட்டி அமேதியில் கன்ஃபார்ம்.

    English summary
    The BJP naming Smriti Irani as the party's candidate from Uttar Pradesh's Amethi. Smriti Irani up for a second fight with party chief Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X