டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்!.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 70 சதவீதம் பேர் மீண்டுள்ளார்கள். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய விஷயம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் எண்ணிக்கையை பார்த்து அச்சமடைந்துள்ளார்கள். ஆனால் பாதிப்பு எண்ணிக்கைக்கு நிகராக குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,29,638 ஆக உயர்ந்துவிட்டது. 24 மணி நேரத்தில் 834 பேர் பலியாகிவிட்டதால் பலி எண்ணிக்கையும் 46,091 ஆக உயர்ந்துள்ளது.

உன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்உன்னை பார்க்க வேண்டும் என்றால் போதும்.. அடுத்த நாளே சென்னை வந்துடுவார்.. கமலா குறித்து சித்தி தகவல்

குணமடைந்து

குணமடைந்து

இதுவரை 16,39,599 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இது 70 சதவீதம் ஆகும். உலகளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த 3ஆவது நாடு இந்தியாவாகும். அந்த இந்தியாவில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் 5.35 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில் மாநிலத்தில் கொரோனாவின் 2ஆவது அலை இன்னும் வீசவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 3.08,649 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,834 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் அண்மைக் காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 1.99 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதுவரை 3,398 பேர் பலியாகிவிட்டனர். 80 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான விதிகளை கர்நாடகா அரசு மாற்றியுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கோவாவில் கொரோனா சோதனை எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதுவரை 1,53,792 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 9,444 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவின் 24 மணி நேர கொரோனா பாதிப்பு, அமெரிக்கா, பிரேசிலை காட்டிலும் மிக அதிகம் என தெரிவிக்கிறது.

English summary
So far 70% people gets discharged from Corona virus in India, says Union Health Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X