டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூக விலகல் முக்கியம்தான்.. ஆனால் 14 மணி நேர ஊரடங்கு வைரஸை கட்டுப்படுத்துமா?.. உண்மை நிலவரம் இதோ..

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக விலகல் முக்கியமானதுதான். ஆனால் வைரஸ் பரவலை தடுக்க 14 மணி நேர மக்கள் ஊரடங்கு என்பது போதுமானதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Recommended Video

    தொடங்கியது 14 மணி நேர மக்கள் ஊரடங்கு

    கொரோனா வைரஸால் இந்தியாவில் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இரண்டரை லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தால் அதாவது சமுதாய பரவல் நிலைக்கு சென்றுவிட்டால் பின்னர் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என மற்ற நாடுகள் மூலம் தெரிந்து கொண்டோம்.

    கட்டுக்கடங்காமல் போகும் வைரஸ்.. 45 நிமிடங்களில் கொரோனா கண்டறியும் சோதனைக்கு அமெரிக்காஅனுமதிகட்டுக்கடங்காமல் போகும் வைரஸ்.. 45 நிமிடங்களில் கொரோனா கண்டறியும் சோதனைக்கு அமெரிக்காஅனுமதி

    பிரதமர் உரை

    பிரதமர் உரை

    மற்ற நாடுகளை போல் இந்தியாவும் 3ஆவது நிலைக்கு செல்லாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் 29 நிமிடங்கள் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இந்த வைரஸ் பரவலை தடுக்க இன்றைய தினம் அதாவது மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    வைரல்

    வைரல்

    அவர் அறிவித்தது முதல் சமூகவலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் வருகின்றன. அதில் கொரோனா வைரஸின் வாழ்நாள் 12 மணி நேரம்தான். எனவே இந்த 14 மணி நேர ஊரடங்கு வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் என ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் #JantaCurfew என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் வைரலாகி வருகிறது.

    பல வழிகள்

    பல வழிகள்

    ஆனால் உண்மை என்னவெனில் வைரலாகும் செய்தியில் துளிக் கூட உண்மை இல்லை. ஆம். கொரோனா வைரஸால் மேற்பரப்புகளில் 3 நாட்கள் வரை உயிரோடு இருக்க முடியும். நோய் பாதித்தவர்களால் இந்த நோய் இரு வாரங்கள் வரை பரவும். வைரஸ் பரவல் என்பது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பல வழிகளில் பரவி வருகிறது.

    வைரஸ்

    வைரஸ்

    அதன்படி நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவது என்பது தொடுதல் மூலம் எளிதில் நடைபெறும். பாதிக்கப்பட்ட நபருக்கு இருமல், தும்மல் இருந்தால் அதிலிருந்து அருகில் உள்ள நபர்களுக்கு பரவும். மறைமுகமாக கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தொட்ட இடத்தை மற்றவர்களும் தொட்டால் அவர்களுக்கும் இந்த வைரஸ் பரவிவிடும்.

    2 வாரங்கள்

    2 வாரங்கள்

    கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூலம் சராசரியாக 2.6 சதவீதம் பேருக்கு பரவி வருகிறது. ஒருவருக்கு கொரோனா பாதித்து அவருக்கு எந்த அறிகுறியும் தென்படாவிட்டாலும் அவர் உடலில் உள்ள நோய் கிருமிகள் 2 வாரங்களுக்கு அவருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு பரவும்.

    14 மணி நேர ஊரடங்கு

    14 மணி நேர ஊரடங்கு

    கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களின் மீது எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பது குறித்து ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி காற்றில் 3 மணி நேரமும் உலோக பரப்புகளில் 4 மணி நேரமும், கார்டுபோர்டுகளில் 24 மணி நேரமும், பிளாஸ்டிக், ஸ்டீல் பொருட்களில் 2 முதல் 3 நாட்கள் வரையிலும் உயிரோடு இருக்கும். எனவே 14 மணி நேர ஊரடங்கு மூலம் வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பது தவறான கருத்து. இது புதிதாக யாருக்கும் பரவிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு.

    English summary
    Social distancing is more important. But the 14 hours curfew will break the virus infection?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X