டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் நாட்டில் சமூக அவசர நிலை.. கடினமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை.. மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டின் சமூக அவசர நிலை போன்ற சூழ்நிலை நிலவுகிறது என்றும், கடினமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற அனைத்துகட்சி குழு தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Government may plan to extension of lockdown in country level

    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் ஒரே நாளில் 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அழைப்பு விடுத்திருந்தார்.
    மோடி தலைமையில் கூட்டம்
    அனைத்து கட்சி கூட்டம்

    காலை 11மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் குலாம் நபிஆசாத், திமுக சார்பில் டிஆர் பாலு, அதிமுக சார்பில் நவநீதிகிருஷ்ணன் உள்பட 15 அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

    இந்தியா தள்ளப்பட்டுள்ளது

    இந்தியா தள்ளப்பட்டுள்ளது

    அந்த கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இதற்கு பிறகு பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் பேசுகையில், உலகில் பல்வேறு நாடுகளில் இந்த கொரோனா நோய் பாதிப்பு இருக்கிறது. இந்தியாவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று. தற்போதைய சூழ்நிலையில் கடிமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு இந்திய நாடு தள்ளப்பட்டு உள்ளது.

    ஊரடங்கை நீட்டிக்க

    ஊரடங்கை நீட்டிக்க

    கொரோனா வைரஸ் தொற்று பரவிய பிறகு நாட்டின் சமூக அவசர நிலை போன்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுமட்டுமில்லாமல் பல்வேறு மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், நிபுணர்கள் இந்த ஊரடங்கை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கடந்த 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் அதை திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலங்களின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.

    உயிரை காப்பற்றணும்

    உயிரை காப்பற்றணும்

    கொரோனா பரவலுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது. இப்போது அரசின் முன்னுரிமைப் பணி. ஒவ்வொருவர் உயிரையும் காப்பாற்றுவதே. தற்போதைய நிலையில் நாம் பணிபுரியும் நிலையிலேயே மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற அரசு உறுதி பூண்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

    ஏப்ரல் 11ம் தேதி முடிவு

    இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏபரல் 11ம் தேதி மீண்டும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது எத்தனை நாட்கள் லாக்டவுனை (ஊரடங்கை) நீடிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டடுள்ளது. பல்வேறு மாநிலங்கள் ஊரடங்களை நீட்டிக்க யோசித்து வருகின்றன. எனவே எத்தனை நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு என்பது சனிக்கிழமை தெரிந்துவிடும்.

    English summary
    Situation in country is akin to a ‘social emergency’; it has necessitated tough decisions and we must continue to remain vigilant. States, District administrations and Experts have suggested extension of Lockdown to contain spread of the virus: PM during interaction with MPs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X