டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இதேபோன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சுப்ரீம்கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனு இன்று நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் வந்தது. ​​இதே போன்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி மனுவை ஏற்க மறுத்தது.

Social Media and Aadhaar link pleas, Supreme Court refuses to entertain PIL

இந்த வழக்கு முக்கியமானதாக இருக்கலாம், ஆனால், எல்லாமே உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வர முடியாது. எனவே, மனுதாரர் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். இந்த மனுவை திரும்பப் பெற உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என, அஸ்வினி குமாரிடம் உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவுறுத்தியது.

'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா? நிஜம் இதுதான்'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா? நிஜம் இதுதான்

சமூக ஊடக பெரு, நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை, சமூக ஊடக பொறுப்புகள் மற்றும் ஆதார் இணைப்பு தொடர்பான வழக்குகளை பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை இதே பெஞ்ச்தான் விசாரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

English summary
The Supreme Court today refused to entertain a fresh PIL seeking linkage of Aadhaar with social media profiles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X