டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை சமூக தடுப்பூசி நம்மை காக்கும் - மோடி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கும்வரை, சமூக விலகல் தடுப்பூசிதான் நம்மை பாதுகாக்க சிறந்த வழிகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கும்வரை சமூக தடுப்பூசிதான் நம்மை பாதுகாக்க சிறந்த வழிகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். முககவசம் அணிந்து, 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கும் விதியை பின்பற்றுங்கள். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். குடும்பத்தில் உள்ள மூத்த குடிமக்களை கவனியுங்கள். இவை அனைத்தும் முக்கியமானது. கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் தினசரியும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 95 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 45 லட்சம் பேர் வரை கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் பேர் வரை குணமடைந்திருந்தாலும் 10 லட்சம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Social vaccine is the best way says Prime Minister Modi

பீகாரில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் விவசாயிகளுக்கு உதவும் இ-கோபாலா என்ற செயலியையும், மீன்வளர்ப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்திய சம்பத யோஜனா என்ற திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பெரிய அளவில் பயனடைவார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி, உங்களிடம் இருந்து எனக்கு சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அதாவது முககவசம் அணிந்து, 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கும் விதியை பின்பற்றுங்கள். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். குடும்பத்தில் உள்ள மூத்த குடிமக்களை கவனியுங்கள். இவை அனைத்தும் முக்கியமானது.

கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கும்வரை, இத்தகைய சமூக தடுப்பூசிதான் நம்மை பாதுகாக்க சிறந்த வழிகள் என்று கூறிய மோடி, அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என்று கூறினார். கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இது மட்டுமே ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், கொரோனா வைரசையும், வெள்ளப்பெருக்கையும் பீகார் தைரியமாக எதிர்கொண்டது. பீகாரிலும், அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய சேதத்தை நாங்கள் அறிவோம். மத்திய-மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் விரைவாக நிவாரணப்பணிகள் முடிக்கப்பட்டன.

New Education Policy: சிந்திக்க தூண்டும்...வேலை வாய்ப்பு அளிக்கும்...பிரதமர் மோடி!! New Education Policy: சிந்திக்க தூண்டும்...வேலை வாய்ப்பு அளிக்கும்...பிரதமர் மோடி!!

அரசு மேற்கொண்ட முயற்சிகளால் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது. விவசாயிகள் பலன்பெறுவதற்காக மத்திய அரசு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரத்தை செலுத்துகிறது. இதில் பீகாரை சேர்ந்த 75 லட்சம் விவசாயிகள் இதுவரை பயன்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் ஏராளமான புலம்பெயர்ந்தவர்கள் பீகாருக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் கால்நடைத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருவதால் இந்த துறையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
PM Narendra Modi said that people not to take coronavirus lightly, wear face masks social vaccine is the best way to protect us until scientists develop a vaccine against corona. Wear a mask and follow the rule of 2 meter spacing. Stay safe and healthy. Consider the senior citizens in the family. These are all important. Prime Minister Modi digitally launches the Pradhan Mantri Matsya Sampada Yojana and e-Gopala App.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X