டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை!

இந்தியாவிற்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்ட முயன்று கொண்டு இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்ட முயன்று கொண்டு இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தற்போது உலக அளவில் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை சீனாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை எடுத்து சென்றுவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசினார். இரண்டு நாட்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் 20 நிமிடம் வரை பேசினார்கள் .

என்ன பேசினார்

என்ன பேசினார்

ஆசியாவில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் மாற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி டிரம்ப்பிடம் பேசினார்
முக்கியமாக காஷ்மீர் பிரச்சனை குறித்து இதில் பேசியதாக கூறப்படுகிறது. காஷ்மீர் பிரச்சனை இதனால் மீண்டும் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

மோடி என்ன சொன்னார்

மோடி என்ன சொன்னார்

மோடி தனது பேச்சில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டுகிறது.ஆசிய பிராந்தியத்தில் சில தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார்கள், இந்தியாவிற்கு மிக கடுமையாக வன்முறையை தூண்டி விட பார்க்கிறார்கள்.

என்ன வர்த்தகம்

என்ன வர்த்தகம்

இது எங்கள் பிராந்திய அமைதிக்கு ஏற்றது கிடையாது. இரண்டு நாட்டு வர்த்தகம் தொடர்பாக விரைவில் நாம் ஆலோசிக்க வேண்டும். வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் ஒப்பந்தைகளை நாம் விரைவில் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தனது தொலைபேசி பேச்சில் டிரம்ப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஏன்

மீண்டும் ஏன்

அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையிலான இந்த உரையாடல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு இதன் மூலம் இந்தியா மேலும் அழுத்தம் அளிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் தற்போது பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Some Leaders are trying to create riot against India says PM Modi to USA President Trump over the phone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X