• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மே 17ம் தேதிக்குப் பிறகு என்ன பண்ணப் போறீங்க.. என்ன திட்டம் இருக்கு.. மத்திய அரசுக்கு சோனியா கேள்வி!

|

டெல்லி: இந்தியா முழுவதும் லாக்டவுன் முடியும் நாளான மே 17-ஆம் தேதிக்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கர் ஆகிய முதல்வர்கள், காங்கிரஸ் மூத்த அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினர் ப சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை சிகப்பு, ஆரஞ்ச், பச்சை என பிரித்த போது தங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் தெரிவித்தனர்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கூறுகையில் களத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கொரோனா வைரஸ் எண்ணிக்கை அடிப்படையில் ஜோன்களை பிரித்தது கவலை அளிக்கிறது. இது தற்போது வழக்கத்திற்கு மாறான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் மாநில முதல்வர்களை கலந்தாலோசிக்காதது ஏன்?

ரூ. 10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

ரூ. 10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

மாநிலங்களுக்கான கொரோனா நிதி தொகுப்பு குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் "கொரோனா தொகுப்பு நிதி தராமல் எப்படி மாநிலங்களும் இந்த நாடும் இயங்கும்? இந்த கொரோனா ஊரடங்கினால் எங்கள் மாநிலத்தில் ரூ 10 ஆயிரம் கோடி வருவாயை இழந்துள்ளோம். தொகுப்பு நிதியை தர வேண்டும் என மாநில அரசுகள் பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் அதை மத்திய அரசு கேட்க தயாராக இல்லை?" என்றார்.

தொழில்கள்

தொழில்கள்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் கூறுகையில் நாங்கள் இரு கமிட்டிகளை உருவாக்கியுள்ளோம். ஒன்று லாக்டவுனிலிருந்து வெளியே வர வியூகம் வகுப்பது, இன்னொரு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்றார். அது போல் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறுகையில் மாநிலங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே மாநிலங்களுக்கு உண்டான நிதியை மத்திய அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். 80 சதவீத சிறு குறு தொழில்கள் இப்போதுதான் வேலையை தொடங்கியுள்ளன என்றார்.

கொடூரம்

கொடூரம்

அப்போது மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறுகையில் நிதி விவகாரத்தில் மாநில அரசுகள் பேரழிவை சந்தித்து வருகின்றன. ஆனால் கொரோனா நிதியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. அடித்தட்டு மக்களுக்கு நிதியுதவி வழங்குங்கள் என மத்திய அரசிடம் நாங்கள் கோரி வருகிறோம். ஆனால் அரசோ மக்களிடம் இருந்து பல்வேறு வகையில் பணத்தை பறிக்கின்றனர். இது மிகவும் கொடூரம் என்றார் சிதம்பரம்.

மே 17-க்கு பிறகு என்ன நடக்கும்

மே 17-க்கு பிறகு என்ன நடக்கும்

அப்போது பேசிய சோனியா காந்தி பொருளாதாரம் பாதித்துள்ள நிலையில் இந்த லாக்டவுனிலிருந்து வெளியே வர மத்திய அரசு எவ்வாறு திட்டமிட்டுள்ளது? மே 17-ஆம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும்? சூழல் எப்படியிருக்கும்? இதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். லாக்டவுன் காலம் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பதை தீர்மானிக்க மோடி அரசு பயன்படுத்தும் காரணிகள் எவை என்பது குறித்தும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகளுக்கு விளக்க வேண்டும் என்றார். இதையே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் வலியுறுத்தினார். இத்தனை கஷ்டங்களுக்கு இடையே உணவு பாதுகாப்பை உறுதி செய்ய கோதுமை உற்பத்தியை அதிகரித்த பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு சோனியா நன்றி கூறினார்.

 
 
 
English summary
Centre not helping as states bleed, govts not consulted on coronavirus zones: Congress CMs raise concerns. Sonia Gandhi asks After May 17th What?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X