டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது கதையல்ல நிஜம்.. நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி- மேனகா காந்தி நடத்திய அதிசயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sonia and Menaka takes oath | நாடாளுமன்றத்தில் சோனியா -மேனகா நடத்திய அதிசயம்- வீடியோ

    டெல்லி: சோனியா காந்தியும் அவரது மைத்துனரின் மனைவி மேனகா காந்தியும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கூறி கொண்ட அபூர்வம் நடந்தேறியது.

    17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நேற்று முன் தினமும் நேற்றைய தினமும் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது.

    முதல் நாளில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். சுவாரஸ்யம் என பார்த்தால் ஸ்மரிதி இரானி பதவியேற்றுக் கொண்ட போது மோடி உள்பட பாஜக எம்பிக்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

    புகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ! புகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ!

     அபூர்வ சம்பவங்கள்

    அபூர்வ சம்பவங்கள்

    காரணம் அமேதியில் ராகுலை தோற்கடித்து அபாரமாக வெற்றி பெற்றதால் இந்த கரகோஷம். ஆனால் நேற்றைய தினம் அதிர்ச்சி சம்பவங்களும் அபூர்வ சம்பவங்களும் நடந்தேறின.

    டெல்லியில்

    டெல்லியில்

    தமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டதோடு தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கூறி லோக்சபாவையே அதிர வைத்தனர். டெல்லியிலும் தமிழ் கொடி பறந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

     ஜெய்ஸ்ரீராம்

    ஜெய்ஸ்ரீராம்

    தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டிங்கானது. தமிழ் வாழ்க என கோஷத்துக்கு பதிலாக பாரத் மாதா கி ஜே என்ற கோஷமும் ஒலித்தது. அது போல் பெரியார் கோஷத்துக்கு பதில் ஜெய்ஸ்ரீராம் எனும் கோஷம் எழுப்பினர்.

    அதிர்ச்சி

    இது போன்ற முழக்கங்களால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் லோக்சபாவில் ஒரு அபூர்வ சம்பவமும் நடந்தது. சோனியா காந்தியும், மேனகா காந்தியும் பதவியேற்றுக் கொண்ட போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதனால் லோக்சபாவே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

    சோனியா குடும்பம்

    ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சீவ் காந்தியின் மனைவி மேனகா காந்தி. என்னதான் காங்கிரஸ் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும் அவர் ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தார். அது போல் சோனியா குடும்பத்துக்கும் மேனகா குடும்பத்துக்குமான உறவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Sonia Gandhi and Maneka Gandhi greets each other in Parliament. This is very rare incident ever the Parliament seen before.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X