டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தைரியம் இருந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு அமித்ஷாவை விசிட் அடிக்க சொல்லுங்கள் பார்ப்போம்.. சோனியா

Google Oneindia Tamil News

Recommended Video

    'Muslims Needn't Worry': Amit Shah In Parliament On Citizenship

    டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால் போராட்டம் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வரட்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சவால் விடுத்துள்ளார்.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

    இந்த சட்டத்திருத்தத்தில் முஸ்லீம் சமூகத்தினர் சேர்க்கப்படாததாலும் இன்னும் சில திருத்தங்களை மேற்கொள்ள கூறியும் இந்தியா முழுவதும் போராட்டம் வலுபெற்றுள்ளது.

    தடியடி

    தடியடி

    வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. தெற்கு டெல்லியில் போராட்டக்களம் போர்க்களமாகிவிட்டது. பேரணி செல்ல முயன்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கடுமையாக தாக்கினர்.

    கடும் போராட்டம்

    கடும் போராட்டம்

    இந்தியா முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேசத்தில் அமைதியின்மையை உருவாக்குவது, வன்முறையை பரப்புவது, நாட்டின் இளைஞர்களின் உரிமைகளை பறிப்பது என்ற மோடி அரசின் குறிக்கோள்களை குடியுரிமை மசோதா மூலம் நிறைவேற்றிக் கொண்டனர்.

    நரேந்திர மோடி

    நரேந்திர மோடி

    நாட்டில் மத ரீதியிலான பாகுபாடு பரப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெற்று கொள்ள பாஜக முயற்சிக்கிறது. இவையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் தொடங்கிவைத்ததே தவிர வேறு யாரும் இல்லை.

    இந்தியா வருகை ரத்து

    இந்தியா வருகை ரத்து

    அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்கள் போராட்டத்தால் பற்றி எரிகின்றன. இந்த சூழலில் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல அமித்ஷாவுக்கு தைரியம் இல்லை. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டே வங்கதேச அமைச்சரும், ஜப்பான் பிரதமரும் இந்தியா வருகையை ரத்து செய்துள்ளனர்.

    English summary
    Congress Interim President Sonia Gandhi challenges Amit Shah to visit north east states as violent erups against Citizenship Amendment Act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X